Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருபெயர்ச்சி 2018 - 19 : மிதுனம் ராசிக்காரங்க புது வீடு கட்டி குடியேறுவாங்க

துலாம் ராசியில் உள்ள குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பெயர்ச்சி அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நிகழ உள்ளது. தற்போது உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 6 ஆம் வீட்டில் அமரப்போகும் குருபகவான், உங்களின் 10ஆம் வீடு, 12ஆம் வீடு, 2 ஆம் வீட்டை பார்வையிடுகிறார்.

சந்திரன் நிற்கும் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய ஸ்தானங்களில் குரு பகவான் அமரும் காலம் நல்ல பலன்களை அளிகிறார். 2018 குரு பெயர்ச்சியானது துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறது. எனவே ரிஷபம் , கடகம், துலாம்,மகரம்,மீனம் ஆகிய ராசிகளுக்கு சுப பலன்களை அளிக்கவிருக்கிறார்.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு 6வது வீட்டில் குரு நிற்கிறார். இது சுமாரான அமைப்புதான். குரு பார்வை விழும் 2ஆம் இடம் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமாகும். 10ஆம் இடம் தொழிலையும், 12ஆம் இடம் விரைய ஸ்தானமாகும்.

குரு பெயர்ச்சியால் என்ன பலன்

குரு பெயர்ச்சியால் என்ன பலன்

'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. சகட குருவாச்சே! கவலைகளையும், குழப்பத்தையும், தர்ம சங்கடமான சூழ்நிலையையும் தருவாரே... என்று கலங்காதீர்கள். "தேவகுரு ஆறில் வந்தால் தேவைகள் பூர்த்தியாகும்...ஆவல்கள் தீரவேண்டின் அனுசரிப்பும் தேவையாகும்...கோபத்தை விலக்கினாள் தான் குடும்பத்தில் அமைதி கூடும் தீபத்தில் குருவை கண்டு தரிசித்தால் நன்மை சேரும். எனவே நின்று நிதானமாக செயல்பட்டால் அதிக பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

மருத்துவ செலவு

மருத்துவ செலவு

6 ஆம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம் என்பதால் உடல் நலம் பாதிக்கப்படும். மருத்துவ செலவு ஏற்படும். எதிரிகளின் பலமும் சற்று கூடும். பொறுமையுடன் இருப்பது நல்லது.கோபத்தை தவிர்த்து புத்தி கூர்மையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

வியாபாரம் தொழில் வளர்ச்சி

வியாபாரம் தொழில் வளர்ச்சி

குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டைப் பார்ப்பதால் பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வி.ஐ.பிகளின் அறிமுகம் கிட்டும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில் ஸ்தானத்தில் குரு பார்வை விழுவதால் தொழில் முன்னேற்றம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் நன்றாக இருக்கும்.

புது வீடு கிரகப்பிரவேசம்

புது வீடு கிரகப்பிரவேசம்

உங்களின் விரய வீடான 12ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடுகட்ட ஆரம்பிப்பீர்கள். கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கூடி வரும்.

கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்

கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்

குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் தன ஸ்தானமான 2ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அழகு, ஆரோக்யம் கூடும். வங்கியில் கடன் உதவி கிடைக்கும். தன வரவு இருக்கும். பேச்சில் இனிமை கூடும். வியாழக்கிழமை குருபகவானை தரிசனம் செய்து உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்ய நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+