குரு பெயர்ச்சி 2019-20: பூசம், ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி நிகழப்போகிறது. அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
சென்னை: குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசி நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் எட்டாவதாக வருவது பூசம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின்நான்கு பாதங்களும் கடகம் ராசியில் உள்ளது. சனிபகவானின் நட்சத்திரம் பூசம். கடகத்தில் உள்ள இன்னொரு நட்சத்திரம் ஆயில்யம். இது புதனின் நட்சத்திரம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
குருபகவான் இப்போது விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் 28ஆம் தேதி விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திலிருந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மூலம் நட்சத்திரத்தில், அக்டோபர் 28 முதல் டிசம்பர் 20ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார். பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.
அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப்போகிறார். மீண்டும் குருபகவான்
மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். மீண்டும் தனுசு ராசிக்க வரும் குரு பகவான் டிசம்பர் 26ஆம் தேதி மகரம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் பூசம்,ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

சனிபகவான் நட்சத்திரம் பூசம்
தர்மதேவன் எடுத்த வடிவம் சனி பகவான் சனியின் நட்சத்திரம் பூசம். வேஷம் போடத்தெரியாதவர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். அன்பானவர்கள் அசராதவர்கள். சந்திரன் வீட்டில் சனி நட்சத்திரம். தெளிவானவர்கள் பூசம் நட்சத்திர காரர்கள். குரு பெயர்ச்சியால் உங்களுக்கு என்னென்ன நலம் தருகிறது என்று பார்க்கலாம். உங்களுக்கு நன்மை தரக்கூடிய சனியுடன் குரு சேரப்போகிறார். திருப்பங்களும் முன்னேற்றங்களும் கொண்ட கால கட்டம் இது. உங்க நட்சத்திரம் உள்ள ராசிக்கு ஆறாமிடம் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறது.

நினைத்தது நிறைவேறும்
திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண யோகமும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கிறது. வீடு கட்டும் யோகம் வரப்போகிறது. குரு பெயர்ச்சியால் தெம்பும் உற்சாகமும் கூடும். காரணம் உங்களுக்கு நன்மை தரக்கூடிய சனி ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வாகன யோகமும் கூடி வருகிறது. உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். நீண்ட நாள் கனவுகள் ஆசைகள் கைகூடி வரும். தெய்வ சக்தி கூடவே வரும்.
உதவிகள் தேடி வரும்.

அம்சமான குரு பெயர்ச்சி
புதன் அம்சம் ஆயில்யம். சந்திரனின் வீடான கடக ராசியில் உள்ளது ஆயில்யம் நட்சத்திரம். எந்த விசயமாக இருந்தாலும் தீர்க்கமாக முடிவு செய்வீர்கள். குரு பெயர்ச்சியால் உற்சாகமடைவீர்கள். வளமான எதிர்காலம் அமையும். ஆறாம் வீட்டிற்கு போகும் குரு ஆயில்யம் நட்சத்திர காரர்களுக்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாது. மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான குரு பெயர்ச்சி என்றாலும் மெத்தனமாக இருக்காதீங்க.

கை நிறைய சம்பளம்
திருமண பேச்சு சுமூகமாக நடைபெறும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க. எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு தனி அந்தஸ்து கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் கூடும். தொழில் செய்யும் தேடி வருகிறது. குரு அமரும் இடம் சரியில்லை என்றாலும் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் நிரந்தர வருமானம்.

நோய்கள் தீரும்
வெளிநாடு யோகம் ஜாதகத்தில் இருந்தால் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நல்லது நடக்கும். சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சூழ்ச்சிகளை முடியடிப்பீர்கள். திசாபுத்தியைப் பொறுத்து உங்களுக்கு மேலும் நன்மைகள் நடக்கும். குல தெய்வ வழிபாடு நன்மையை ஏற்படுத்தும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications