குரு பெயர்ச்சி 2019-20: புனர்பூசம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி நிகழப்போகிறது. அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசி நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஏழாவதாக வருவது புனர்பூசம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் மூன்று பாதங்கள் மிதுனம் ராசியில் உள்ளன. ஒரு பாதம் கடகம் ராசியில் உள்ளது. குருவின் நட்சத்திரம் புனர்பூசம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

குருபகவான் இப்போது விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் 28ஆம் தேதி விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திலிருந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மூலம் நட்சத்திரத்தில், அக்டோபர் 28 முதல் டிசம்பர் 20ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார். பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.

அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப்போகிறார். மீண்டும் குருபகவான்
மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் புனர்பூசம் நட்சத்திரகாரர்களுக்கு கவலைகள் பறந்து போகும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

பிரச்சினைகள் தீரும்

பிரச்சினைகள் தீரும்

இதுநாள் வரை உடம்பில் பிரச்சினை பார்க்கிற வேலையில் பிரச்சினை என கஷ்டப்படுத்தியது. காரணம் கண்டச்சனி. சனி ஏழில் கூடவே கேது இருப்பதால் சிந்தனை செயல் எல்லாம் கடவுளை நினைத்துக்கொண்டே இருக்கும். சனி போகாத ஊருக்கு வழி காட்டுவார். சனி அதிரடியாக அடித்து ஆடுவதால் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லையே என்று புலம்ப வைப்பார். திட்டம் போய் காய் நகர்த்தினாலும் எதுவும் நடக்கலையே என்ற கோபம் வரும். குரு பெயர்ச்சி எல்லா மன காயங்களுக்கும் மருந்தாகும். தேவையான முதலீட்டினை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்குவார். வேலையை எதிர்பார்த்திருப்பவர்கள் சொந்த தொழில் செய்யலாம். குருவினால் இதுநாள்வரை ஏற்பட்ட இழப்புகள் சரியாகும்.

சம்பள உயர்வினால் பணவரவு

சம்பள உயர்வினால் பணவரவு

குரு தனது ராசியில் சொந்த வீட்டில் அமர்கிறார். இது பொன்னான காலம். காரணம் குரு உங்க ராசியை பார்க்கிறார் மூன்றாம் வீட்டையும், லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் பணவரவு கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும். புதிய முயற்சிகள் கை கொடுக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கலைத்துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

தம்பதியர் ஒற்றுமை

தம்பதியர் ஒற்றுமை

ஏழாம் வீட்டில் சனி கேது கிரகங்களினால் தினந்தோறும் சண்டைதான். கேதுவை நோக்கி குரு நெருங்குவதால் வீடு, அலுவலகத்தில் நன்மைகள் நடைபெறும். சூழ்நிலைகள் மாறப்போகிறது. குரு ஏழாம் வீட்டிற்கு வந்து சனியும் கேதுவும் இணையப்போகும் காலம் இதுவாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கப்போகிறது. தம்பதியடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை இல்லாவிட்டால் தவறாக புரிந்து கொள்ளப்படுவார்கள். பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

திடீர் அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டம்

பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும். சேமிப்புகள் சேரும் புதிய வேலைகளால் நன்மை. திடீர் மாற்றம் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். ராசிக்கு மூன்றாம் வீடான சிம்மத்தின் குரு பார்வை வருமானத்தை அதிகரிக்கச் செய்யும். தைரியம் கூடும். மூன்றாம் வீட்டில் குரு பார்வை படுவதால் சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். இளைய சகோதரர்களால் நன்மையே நடைபெறும். லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் வருமானம் கூடும். புனர்பூசம் நட்சத்திரகாரர்களுக்கு செல்வம் செல்வாக்கு கூடும்

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு

பிள்ளைகளுடன் உற்சாகமாக இருப்பீர்கள். கண்டங்கள் தள்ளிப்போகும் என்றாலும் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. நீங்க நியாயவாதியாகவே பேசினாலும் அதை மறுத்து பேச காரணம் வரும். குரு பலம் வருவதால் விரும்பிய திருமணங்கள் விமரிசையாக நடக்கும். உதவி ஒத்தாசை கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். மாணவர்கள் தடம் மாறாமல் இருப்பார்கள். குரு கேது சனி சேர்க்கை இருப்பதால் குல தெய்வ வழிபாடு கை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+