குரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்
குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி நிகழப்போகிறது. அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். த
Recommended Video
சென்னை: குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசி நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஆறாவதாக வருவது திருவாதிரை நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள் மிதுனம் ராசியில் உள்ளன. ராகுவின் அம்சமான சிவன் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
குருபகவான் இப்போது விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி அக்டோபர் 28ஆம் தேதி விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திலிருந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மூலம் நட்சத்திரத்தில், அக்டோபர் 28 முதல் டிசம்பர் 20ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார். பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.
அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப்போகிறார். மீண்டும் குருபகவான்
மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிவனின் நட்சத்திரம்
திருவாதிரை நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரம். சிவன் பிறந்த நட்சத்திரம். மார்கழி திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம் அற்புதமாக இருக்கும். தனுசு ராசியில் அமரப்போகும் குரு தனது பொன்னான பார்வையால் உங்களுக்கு பல நன்மைகளை தரப்போகிறார். உங்க நட்சத்திரத்தை பார்க்கும் குரு பகவானால் நிறைய நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. நிறைய சொத்துக்கள் சேரும்.

வேலை கிடைக்கும்
பெரிய அளவில் முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். கடன்களை வாங்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. வண்டி ஓட்டும் போது கவனம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கல்வியில் ஞாபக சக்தி அதிகரிக்கும். ஓழுக்கம் அவசியம் தீய நட்பு புதிய நட்பை தவிர்க்கவும். உங்கள் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கும். விழிப்புணர்வோடு இருந்தால் பிரச்சினைகள் இல்லை.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு
வெளிநாடு வேலை வாய்ப்பு வரப்போகிறது. தொழிலில் முன்னேற்றம் அமையும்.வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும். சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.

நெருக்கடி தீரும்
உங்க ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருக்கிறாரோ அதற்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். குரு பெயர்ச்சியினால் நெருக்கடியில் இருந்து மீள்வீர்கள். சோதனைகளில் இருந்து மீண்டு வெற்றியடைவீர்கள். பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். பெண்கள் பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு எச்சரிக்கை தேவை.

சோதனைகள் தீரும்
உங்களை சுற்றி சக்கரவியூகம் போல கிரகங்கள் சனி, கேது குரு ராகு என கிரகங்கள் உங்களை அச்சுறுத்தி வருகின்றனர். இடர்பாடுகளை வென்று சாதிக்கும் ஆற்றல் கொண்ட வர்கள் நீங்கள். குரு பெயர்ச்சி உங்களை பொன்னாக புடம் போடும். இதுநாள்வரை கொடுத்த சோதனைகளை வென்று இனி சாதனை செய்வீர்கள். ஆஞ்சநேயர்வழிபாடு நல்லாது, குருபவானை வியாழக்கிழமையும், ஆஞ்சனேயரை சனிக்கிழமையும் வழிபடுவதும் நல்லது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications