Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2019-20: விசாகம், அனுசம் மற்றும் கேட்டை நட்சத்திரங்களுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பகவான் விருச்சிகத்தில் இருந்து குரு பகவான் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்த குருப்பெயர்ச்சியை

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்துள்ளார். குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும்.மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசியை நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இன்றைய தினம் விசாகம், அனுசம், கேட்டை ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

குருபகவான் இப்போது தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மூலம் நட்சத்திரத்தில் டிசம்பர் 20ம் தேதி வரையில் சஞ்சரிப்பார். அதன் பின்னர் தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ஆம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.

அங்கிருந்து அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். மீண்டும் குருபகவான்
மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். மீண்டும் தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் டிசம்பர் 26ஆம் தேதி மகரம் ராசிக்கு நேரடியாக பெயர்ச்சி அடைகிறார். குருபகவானின் இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் விசாகம், அனுசம், கேட்டை ஆகிய நட்சத்திரகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

 பிரச்சினைகள் தீரும்

பிரச்சினைகள் தீரும்

குருவின் நட்சத்திரம் முருகன் பிறந்த நட்சத்திரம், அன்பு வீரம் கலந்த நட்சத்திரம், துலாம் விருச்சிக ராசியில் உள்ளது இந்த நட்சத்திரம். குரு பெயர்ச்சியால் விசாக நட்சத்திர காரர்களுக்கு சந்தோஷமான காலம். தந்தையால் பிரச்சினை, காரியங்களில் தடை என இருந்த காலம் மாறப்போகிறது. ராகு கேது, சனி என இடைஞ்சல்கள் சுற்றிச்சுற்றி வந்தன. இனி பிரச்சினைகள் தீரும் காலம் வரப்போகிறது. குரு பெயர்ச்சியால் கடன்கள் தீரும். பணப்பிரச்சினைகள் தீரும். நோய்கள் நீங்கும். மனநிறையும் சந்தோஷம் ஏற்படும்.

 தடைகள் நீங்கும்

தடைகள் நீங்கும்

குரு உடன் கேது சேர்க்கையால் தெய்வபலம் அதிகரிக்கும். பணத்தால் எதையும் சாதிக்கலாம். மாற்றங்களும் ஏற்றங்களும் ஏற்படும். சொந்த தொழில் செய்ய முயற்சி செய்வீர்கள். வேலை செய்பவர்களுக்கு இனி விரக்திகள் விலகும். கவலை வேண்டாம் காரியத்தடைகள் நீங்கும். உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டு பரிசுகள் தேடி வரும். கணவன் மனைவி பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் உண்டாகும்.

விடிவுகாலம்

விடிவுகாலம்

அனுசம் சனியின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம். செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில் அமர்ந்துள்ள நட்சத்திரம். இந்த குரு பெயர்ச்சியால் சுபிட்சம் வரப்போகிறது. அனுசத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் திடீரென குறைகள் எட்டிப்பார்க்கும் என்றாலும் மனதை தளரவிட வேண்டாம். பட்ட காலிலே படும் என்பது போல பலவித கஷ்டங்களினால் துன்பத்திற்கு ஆளாகி வந்த நீங்க இனி குருவினால் குதூகலம் அடைவீர்கள். ஏழரை சனியால் படாத பாடு பட்ட உங்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கப் போகிறது.

 வீடு வாகன யோகம்

வீடு வாகன யோகம்

செல்வம் செல்வாக்கு கூடும். கணவன் மனைவி இடையே இணக்கம் ஏற்படும். குழந்தைகளால் குதூகலமடையும் குருபலம் வந்து விட்டது.
பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். இனி கடமைகளை சரியாக செய்வீர்கள். இனி தோல்வி முகம் இல்லை வெற்றி மீது வெற்றி தேடி வரும் தொட்டது துலங்கும். புதிய வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். பணத்தடைகள் நீங்கும், வீடு வாகன யோகம் வந்து சேரும்.

 தன லாபம் அதிகமாகும்

தன லாபம் அதிகமாகும்

புதன் நட்சத்திரம் கேட்டை. சாமர்த்திய சாலி நீங்க. புத்திசாலிகள் எச்சரிக்கை குணம் கொண்டவர்கள். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு இதுநாள்வரை நீங்க பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் வரப்போகிறது. வாக்கு ஸ்தானத்தில் சனி கேது அதை பார்க்கும் ராகு என சிரமப்பட்ட நீங்கள் இனி நிம்மதி பெருமூச்சு விடலாம். விரோதத்தை விரட்டி விடலாம். குரு பெயர்ச்சிக்குப் பின்னர் தன லாபம் அதிகமாகும். காரணம் தன காரகன் தன லாபத்தில் அமர்ந்துள்ளார். செலவுகள் குறைந்து சேமிப்புகள் அதிகமாகும். வாங்கிய கடன்களை அடைப்பீர்கள்.

 நல்லது நடக்கும்

நல்லது நடக்கும்


இனி எல்லாம் சுகமே என்பது போல உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவி யோகம் செல்வாக்கு தேடி வரும். மாணவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். வயதில் மூத்தவர்களுக்கு நல்லது தேடி வரும் நோய் பாதிப்புகள் குறையும். விரைய செலவுகள் குறையும்.
உறவுகள் சொந்தங்கள் தேடி வருவார்கள். இந்த குரு பெயர்ச்சி நல்லதை மட்டுமே செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+