Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2019-20: பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பகவான் விருச்சிகத்தில் இருந்து குரு பகவான் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக் க

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்துள்ளார். குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும்.மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசியை நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இன்றைய தினம் பூரட்டாதி, உத்திரட்டாதி , ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

குருபகவான் இப்போது தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மூலம் நட்சத்திரத்தில் டிசம்பர் 20ம் தேதி வரையில் சஞ்சரிப்பார். அதன் பின்னர் தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ஆம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார். அங்கிருந்து அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்.

குருபகவான் மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக சஞ்சரித்து மீண்டும் தனுசு ராசிக்கு வருகிறார். பின்னர் நேரடியாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மகரம் ராசிக்கு நேரடியாக பெயர்ச்சி அடைகிறார். குருபகவானின் இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் பூரட்டாதி, உத்திரட்டாதி , ரேவதி ஆகிய நட்சத்திரகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

கடன்கள் தீரும்

கடன்கள் தீரும்

குருபகவானின் நட்சத்திரம் பூரட்டாதி. நம்பியவரை நீங்க கை விட மாட்டீங்க. தோல்வியே கிடையாது அல்லது தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வீர்கள். குரு பெயர்ச்சி உங்க நட்சத்திரத்திற்கு நிறைய சந்தோஷங்களை தரப்போகிறது. கும்ப ராசியில் மூன்று நட்சத்திர பாதங்கள் உள்ளன. லாபதிபதி லாப ஸ்தானத்தில் குரு பகவான் வருவதால் பணவரவு அற்புதமாக இருக்கும். அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது. நடப்பது எல்லாமே நல்லதாகவே நடக்கும். கவலைகள் தீரும். புதிய கட்டடங்கள் கட்டுவீர்கள். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். கஷ்டங்கள் காணாமல் போகும். கல்யாணம் கை கூடி வரும், கணவன் மனைவி உறவில் சந்தோஷங்கள் கூடி வரும். இந்த குரு பெயர்ச்சி மொத்தத்தில் அமோகமாக இருக்கும்.

யோகம் வரும் காலம்

யோகம் வரும் காலம்

வேண்டியது அனைத்தையும் கடவுள் தேடித்தருவார். மீன ராசியில் அமைந்துள்ள உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. தேவைக்கு அதிகமாக வருமானம் தேடி வரும். சந்தோஷமாக இந்த ஆண்டை நீங்க கடத்தி விடுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் அமைந்துள்ள குருவினால் யோகங்கள் கூடி வரும். இந்த குரு பெயர்ச்சியால் திருப்பங்கள் தேடி வரும். நோயினால் கஷ்டப்பட்ட உங்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.

சந்தோஷங்கள் அதிகமாகும்

சந்தோஷங்கள் அதிகமாகும்

குரு உங்களுக்கு புதிய ஜீவனத்தை தேடி தருவார். குருவோடு சேர்ந்த கேது அளவிற்கு அதிகமான பணத்தை தருவார். உறவினர்களால் நன்மைகள் தேடி வரும். வண்டி வாகனத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். இதுநாள் வரை தேவையில்லாமல் அலைந்த உங்களுக்கு இனி ஆதாயங்கள் கிடைக்கும். லட்சியத்தை அடைய குரு நன்மை செய்வார். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷங்கள் அதிகம் நடக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் பொங்கும். இது உங்களுக்கான தருணம் பிசினஸ் செய்பவர்கள் வருமானத்தை அள்ளுங்கள். கஷ்டங்களை நீக்கும் மனபலத்தை குரு தருவார்.

மன நிம்மதி

மன நிம்மதி

வித்தைக்காரகன் புதனின் நட்சத்திரம் ரேவதி. மனித நேயம் அதிகம் கொண்டவர்கள். மன்னிக்கும் குணம் கொண்டவர்கள். குரு பக்தி அதிகம் கொண்டவர்கள், உங்களின் தகுதிக்கேற்ப கவுரவம் கூட வரும். கஷ்டங்கள் விலகிவிடும். மனச்சோர்வுகள் நீங்கும். நிம்மதி இழந்து தவிக்கும் உங்களுக்கு மனதில் நிம்மதி குடியேறும். சனியும் கேதுவும் இணைந்து சஞ்சலத்தை தருகின்றனர் கூடவே ராகு பார்வையும் தாமதப்படுத்தும். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் பணம் தடைகள் இன்றி வரும். சுப காரியங்கள் கை கூடி வரும். கல்யாண யோகம் கிடைக்கும். புத்திர வரம் தேடி வரும்.

எதிர்ப்புகள் மறையும்

எதிர்ப்புகள் மறையும்

குருவின் பார்வை குடும்ப ஸ்தானம், தன ஸ்தானத்தின் மீது விழுவதால் சொல்லும் செயலும் மதிப்பை பெறும். குடும்ப பாசம் அதிகரிக்கும்.
குறைகள் நிவர்த்தியாகும். பொருளாதார சிக்கல்கள் தீரும். உங்களுக்கு சுகங்கள் அதிகம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும். ராகுவின் மீது குரு பார்வை விழுவதால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். எதிர்ப்புகள் மறையும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள். பொறாமைகள் கட்டுக்குள் வரும். இந்த குரு பெயர்ச்சி உங்களை கம்பீரமானவராக மாற்றும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+