குரு பெயர்ச்சி 2019-20: திருவோணம், அவிட்டம், சதயம் நட்சத்திரங்களுக்கு பலன்கள் எப்படி
குரு பகவான் விருச்சிகத்தில் இருந்து குரு பகவான் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்
சென்னை: குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்துள்ளார். குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும்.மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசியை நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இன்றைய தினம் திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
குருபகவான் இப்போது தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மூலம் நட்சத்திரத்தில் டிசம்பர் 20ம் தேதி வரையில் சஞ்சரிப்பார். அதன் பின்னர் தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ஆம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.
அங்கிருந்து அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். மீண்டும் குருபகவான்
மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். மீண்டும் தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் டிசம்பர் 26ஆம் தேதி மகரம் ராசிக்கு நேரடியாக பெயர்ச்சி அடைகிறார். குருபகவானின் இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் திருவோணம், அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

சாதனை செய்யும் காலம்
திருவோணம் சந்திரனின் நட்சத்திரம். மகரம் ராசியில் திருவோணம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் உள்ளன. வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். ஏழரை சனியால் மன சோர்வு ஏற்பட்டாலும் குரு நல்லதை நடத்திக்காட்டுவார். சுப விரைய செலவுகளை செய்யுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். சனி கேது உடன் இருக்கும் குரு இனி உங்களின் சங்கடங்களை சாதனைகளாக்குவார். பிறருக்கு முன் உதாரணமாக மாறுவீர்கள். நல்லவர்களின் நட்பு நன்மை செய்யும். கணவன் மனைவி இடையே வரும் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கலாம். மன நிறைவோடு விட்டுக்கொடுங்கள்.

பணவரவு
தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கை கொடுக்கும். குருவின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்திற்கு செல்வதால் வீடு வாகன யோகம் அமையும். அம்மாவின் உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். நோய்கள் கட்டுப்படும், தோஷங்கள், கண்டங்கள் விலகும். ராகுவிற்கு குரு பார்வை கிடைப்பது நன்மை. பணவரவு அதிகரிக்கும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். திருமண யோகம் கை கூடி வரும். கடல் கடந்த பயண வாய்ப்புகள் அமையும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் குதூகலத்தை கொடுக்கும்.

சுப செலவுகள்
இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நிறைய சந்தோஷங்களை அள்ளித்தரப்போகிறது. தாமதமானாலும் உங்களுடைய வெற்றிகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் உங்களுக்கு கை கூடி வரும். நிறைய திட்டங்களை போட்டு வைத்திருந்தாலும் அதை செயல்படுத்த முடியலையே என்ற கவலை உங்களை சோர்வடையச் செய்யும். அகலக்கால் வைத்து விட்டு அவஸ்தை படும் உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நல்லது நடக்கும். குரு சனி கேது உடன் சேர்க்கை பெற்று அமர்ந்திருக்கிறார். இனி விரைய செலவுகள் குறையும். அதே நேரம் சுப செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத டென்சன் குறையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும் கூடவே சம்பள உயர்வும் அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். புத்திர யோகம் கிடைக்கும். புது வீடு கட்டி குடியேறுவீர்கள்.

சொத்து சேர்க்கை
இந்த குரு பெயர்ச்சி உங்க ராசிக்கு நிறைய சந்தோஷங்களை கொடுக்கும். நினைப்பது நிறைவேறும், லாப குரு உங்களுக்கு யோகத்தை கொட்டிக்கொடுப்பார். உங்க நட்சத்திர அதிபதி ராகுவை குரு பார்க்கிறார். நிறைய பண வரவு கிடைக்கும். யோகங்கள் தேடி வரப்போகுது. இதுவரை பண இழப்பை சந்தித்தவர்கள் அவற்றை திரும்ப பெறுவீர்கள். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். நோய்கள் தீரும் ஆரோக்கியம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். புதிய புரமோசன் கிடைக்கும். பெற்றோர்களால் நல்லது நடக்கும். சொந்த வீடு, வாகன யோகம் அமையும்.

திருமண யோகம்
பிள்ளைகளால் பல சந்தோஷ விசயங்கள் நடக்கும். மன குழப்பங்கள் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். உங்களுக்கு பூர்வ புண்ணிய பலம் அதிகரிக்கும். கர்மா பலன்கள் கட்டுப்படும். புத்திர யோகம் வரும். குழந்தைகளுக்கு திருமண யோகம், கல்வி வேலை வாய்ப்புகளில் நல்லது நடக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பவங்கள் நடக்கும். புது வேலை அமையும். தொழில் ரீதியான முயற்சிகள் நடக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். மாணவர்களுக்கு யோகமான ஆண்டாக அமையும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications