Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2019: தனுசுவில் ஆட்சி பெற்று அமரும் குருபகவான் - 12 ராசிக்கும் பலன்கள்

பல வருடங்களுக்கு பிறகு குரு பகவான் தன்னுடைய மூலத்திரிகோண வீடு மற்றும் கால புருஷனின் இயற்கை பாக்கியஸ்தானம் ஆகிய தன்னுடைய சொந்த வீட்டில் அமரப்போவதால் கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும், தீமைகள் குறைவாகவ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Guru Peyarchi 2019

    சென்னை: சுப கிரகமான குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல ஓராண்டுகள் ஆகும். கடந்த ஆண்டு விருச்சிக ராசியில் அமர்ந்த குரு பகவான் இன்னும் சில நாட்களில் தனுசு ராசியில் அமரப்போகிறார். இந்த சஞ்சாரம் பற்றியும் 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கப் போகும் பொதுவான பலன் பற்றியும் பல செய்திகளை எழுதியிருக்கிறோம். புகழ் பெற்ற ஜோதிடர்கள் பலரும் எழுதி வருகின்றனர். பிரபல ஜோதிடர் என் சி கிருஷ்ணன் நாயுடு குரு பெயர்ச்சி பற்றி எழுதியுள்ளார் படியுங்கள்.

    பல வருடங்களுக்கு பிறகு குரு பகவான் தன்னுடைய மூலத்திரிகோண வீடு மற்றும் கால புருஷனின் இயற்கை பாக்கியஸ்தானம் ஆகிய தன்னுடைய சொந்த வீட்டில் அமரப்போவதால் கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும், தீமைகள் குறைவாகவே இருக்கும். ந்த குருப்பெயர்ச்சி மூலத்திரிகோண வீடான தனுசுவில் நடைபெறுகின்றது. ஆகையால் குரு பார்க்கும் ராசிகளான மேஷம் மிதுனம் மற்றும் சிம்மத்திற்கு கண்டிப்பாக குருவின் சுப கடாட்சம் கிடைக்கும்.

    தனுசுவில் இருக்கும் சனி மற்றும் கேது பகவான் இவர்களுக்கு, குருவின் ஒளி கிடைக்கும். மேலும் மிதுன ராசியில் இருக்கும் ராகுவை குரு பார்த்து சுபத்துவம் அடையச் செய்வார் இது ஒரு சிறப்பு பலனாகும். மேலும் பல வருடங்களுக்கு பிறகு குரு பகவான் தன்னுடைய மூலத்திரிகோண வீடு மற்றும் கால புருஷனின் இயற்கை பாக்கியஸ்தானம் ஆகிய தன்னுடைய சொந்த வீட்டில் அமரப்போவதால் கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும், தீமைகள் குறைவாகவே இருக்கும்.

    மேஷம்

    மேஷம்

    மேஷ ராசிக்கு குரு பாக்கிய ஸ்தானத்தில் வருவதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வைபவங்கள் உண்டு. ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் அதி சிறப்பு. நற்பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

    ரிஷபம்

    ரிஷபம்

    ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் குரு வந்தாலும்,அங்கு ஆட்சி பெறுவதால் ஆன்மீக பயணங்கள், ஜோதிடத்தில் ஞானம், சுபகாரியங்களில் ஈடுபடுதல். இது போன்ற பலன்கள் நடக்கும். அஷ்டமத்துச் சனியில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறந்த ஆறுதலாக இருக்கும்.

    மிதுனம்

    மிதுனம்

    மிதுனராசிக்காரர்களுக்கு களத்திர ஸ்தானத்தில் கல்யாண குருவாக வருவதால் திருமணம், உத்தியோக மேன்மை, குழந்தைப்பேறு, மேலும் ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் சுப பலன்கள் உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக சனி பார்வை பெற்றும் ஆறு மாத காலமாக ராகு-கேதுவின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கும் மீதுன ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை சிறந்த ஆறுதலாக இருக்கும்.

    கடகம்

    கடகம்

    கடக ராசிக்காரர்களுக்கு, சத்ரு ஸ்தானத்தில் குரு வருவதால் எவ்வளவு கெடுபலன்களை குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வார். உடல்நலம், தொழில் மற்றும் குடும்பத்தை இருமடங்காக கவனம் செலுத்தினால், நற்பலன்கள் உண்டு.

    சிம்மம்

    சிம்மம்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்திர ஸ்தானத்தில் குரு பெயர்ந்து, மேலும் ராசிக்கு குரு பார்வையும் கிடைப்பதால் இவர்களுக்கு புத்திர பாக்கியம் திருமண யோகம் தொழில் மேன்மை பாக்கியம் போன்ற மேம்பட்ட சுபபலன்கள் உண்டு.

    கன்னி

    கன்னி

    கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால், தாயின் ஆசீர்வாதங்கள், வீடு மனை வாங்குவதில் ஆர்வம், தொழில்ரீதியான பிரயாணங்கள் ஆன்மீகப் பயணங்கள் இருக்கும்.மேலும் இந்தப் பயணங்களால் அலைச்சல்கள் குறைவாகவும், மன நிம்மதியும் சுகமும் அதிகமாக இருக்கும். அஷ்டமத்துச் சனியில் பாதி, அர்தாஸ்டமா சனியில் சிக்கிக் வீட்டில் சுகத்தை இழந்த,கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குருவின் ஒளி நற்பலன்களைத் தரும்

    துலாம்

    துலாம்

    துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிக்கு மூன்றாம் இடத்தில்,தைரிய ஸ்தானத்தில் குரு பகவான் ஆட்சி பெறுவதால், கண்டிப்பாக நல்ல ஒரு அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு இலாபங்கள், ஆன்மிக பயணங்கள், கல்யாண வைபவங்கள் இதுபோன்ற பலன்கள் மிக சிறப்பாக நடைபெறும், நீண்ட நாட்களாக தடைபெற்ற அனைத்து காரியங்களும் கைகூடும்.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் ஆட்சி பெறுவதால், சேவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களும், இதர தொழில் செய்பவர்களுக்கும். மேலும் உத்தியோகஸ்தர்களும், லாபங்களும், புரமோஷன்களும், புது வளர்ச்சிகளும் உண்டாகும். மேலும் மேலும் வயதானவர்களுக்கு, ஆயுள் பலம் நன்றாக இருக்கும் உடல்நலம் மிக சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் அவர்களுக்கு பாத சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், இந்த குருப்பெயர்ச்சி குறிப்பாக முதியவர்களுக்கு ஒரு சிறந்த ஒரு பெயர்ச்சியாகும்.

    தனுசு

    தனுசு

    தனுசு ராசிக்காரர்களுக்கு, அவர்கள் ராசிக்கு குரு பெறுவதால் இது வரை ஏழரை சனியின் தாக்கத்தில் அல்லல்பட்டு கொண்டவர்களுக்கு, இந்த குருபெயர்ச்சி ஒரு நல்ல ஒரு ஆறுதலாக இருக்கும்.மேலும் அவர்கள் ராசியில் இருக்கும் சனி மற்றும் கேது பகவானுக்கு குருவின் ஒளி கிடைக்கப் பெற்று, மேலும் அவர்களுக்கு கண்டிப்பாக திருமணம், புத்திரப்பேறு, மற்றும் இதர பாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.
    மேலும் தர்ம கர்ம அதிபதிகள் பாக்கிய ஸ்தானத்தில் இணைப்பு பெறுவது நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கும் ஒரு நிகழ்வாகும். ஆகையால் இது மகத்தான ஒன்றாகும்.

    மகரம்

    மகரம்

    மகர ராசி காரர்களுக்கு ஏழரை சனியில் சிரசு சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அவர்களுக்கு சுபப் பலன்கள் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் கெடுபலன்கள் கண்டிப்பாக குறையும்.மேலும் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்றுவிட்டது என்ற நிலையில் இருக்கும்.
    இது மாதிரியான காலகட்டங்களில் உங்களுடைய தாயை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் எதிரியை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
    எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறை வழிபாடு செய்யுங்கள். கண்டிப்பாக இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ஒரு ஆபத்பாண்டவனாக இருக்கும்.

    கும்பம்

    கும்பம்

    கும்ப ராசிக்காரர்களுக்கு, உச்சபட்ச பலமாக குரு லாப குருவாக வருகின்றார். அவர்களுக்கு எதிர்பாராத பணவரவு, புத்திரபாக்கியம் தைரியம்,எடுத்த காரியங்களில் வெற்றி. திருமண நிகழ்வுகள், சீமந்தம், தடைப்பட்ட திருமணங்கள் போன்ற அனைத்துமே நடைபெறும். மேலும் ஷேர் மார்க்கெட் முதலீடு செய்பவர்கள், வெறும் அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கும் தொழில்கள் அனைதிற்குமே இது ஒரு மகத்தான காலமாகும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    மீனம்

    மீனம்

    மீன ராசிக்காரர்களுக்கு குரு கர்ம மற்றும் தொழில் ஸ்தானத்தில் பெயர்வதால், நிச்சயமாக உத்யோக மேன்மை உண்டு .பொதுவாக பத்தில் குரு பலன்கள் இருக்காது என்று அநேகர் கூறலாம். ஆனால் இந்த இடத்தில் குரு கண்டிப்பாக சிறந்த பலன்களை தருவார். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுகங்கள் வீடு மனை வாங்குவதில் ஆர்வம் சர்வீஸ் ஓரியன்டல் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள், மேலும் தன லாபங்களும் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

    இந்த பெயர்ச்சி பலன்களை உங்களுடைய சுய ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் எத்தனை சதவீதம் பிரதிபலிக்கும் என்பதை ஜோதிடரை இந்த நம்பரை 73391 40502 அணுகி சேவைக்கட்டணத்துடன் தெரிந்து கொள்ளுங்கள்.

    N.C.கிருஷ்ணன் நாயுடு

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+