குரு பெயர்ச்சி 2019: குரு பலம் உங்க ராசிக்கு வந்திருச்சா? - எப்படி தெரிஞ்சுக்கலாம்
சென்னை: திருமணமும், குழந்தை பாக்கியமும் கிடைக்க குருவின் அருள் கண்டிப்பாக வேண்டும். குரு பலம் வந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும். குரு பகவான் தனது சொந்த வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள இந்த நேரத்தில் குருபலத்தால் திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இந்த குரு பெயர்ச்சியால் மேஷம் பாக்ய குரு, ரிஷபம் அஷ்டம குரு, மிதுனம் களத்திர குரு, கடகம் ருண ரோக சத்ரு ஸ்தான குரு, சிம்மம் பூர்வ புண்ணிய ஸ்தான குரு, கன்னி சுக ஸ்தான குரு, துலாம் தைரிய குரு, விருச்சிகம் குடும்ப தன வாக்குஸ்தான குரு தனுசு ஜென்ம குரு, மகரம் விரைய குரு, கும்பம் லாப குரு, மீனம் தொழில் ஸ்தான குரு, என இம்முறை குருவின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிடுகிறார். விருச்சிகத்தில் இருந்து இடப்பெயர்ச்சியாகி தனுசுவில் அமரும் குரு பகவான் தனது பொன்னொளி பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளை பலமடையச் செய்கிறார். குருபகவான் பொதுவாக ராசியில் அமரும் போதோ அல்லது 2,5,7,9,11 ஆகிய இடங்களில் அமரும் போதோ முதல்தர குரு பலம் வந்து விட்டதாக கூறலாம். அதே போல 3, 8, 10 ஆகிய இடங்களில் அமரும் போது இரண்டாம் தர குரு பலம் வந்து விட்டதாக சொல்லலாம்.

குரு பார்வை தரும் யோகம்
குரு பார்வை கோடி புண்ணியம் குரு அமரும் இடத்தை போல குரு பார்வை குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானத்தின் மீது விழும் போது திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இந்த குரு பெயர்ச்சியால் குடும்பம் உருவாகி இல்லற பந்தத்தில் இணையும் யோகம் நமக்கு இருக்கிறதா என்று ஆசையோடு பலரும் ராசி பலன்களை படித்து வருகின்றனர்.

கல்யாண கனவு நனவாகும் ராசிகள்
மனித வாழ்க்கையில் திருமணம் அத்தனை முக்கியமானதா என்று கேட்கலாம். பொது இடத்திலோ, விஷேச வீட்டிலோ தனியாக போய் நிற்பதை விட தம்பதி சமேதராக போய் நிற்பது ஒரு மதிப்புதான். திருமணம் ஆன பின்னர் வாழ்க்கை துணையின் மூலம் மதிப்பு கூடுகிறது. குடும்பம் உருவாகி குழந்தைகள் உருவாகி சந்ததி தழைக்கிறது. எனவேதான் குருபலம் ஜாதகத்தில் அத்தனை முக்கியமானதாக கூறுகின்றனர்.

கெட்டி மேளம் கொட்டும்
இந்த முறை தனுசு, விருச்சிகம், சிம்மம், மிதுனம், மேஷம், கும்பம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான குருபலம் காரணம் ஜென்மகுரு, குடும்ப குரு, பூர்வ புண்ணிய குரு, களத்திர குரு, பாக்ய குரு லாப குரு என இந்த ராசிகளில் குரு சஞ்சரிக்கிறார். இதனால் சிங்கிள்ஸ் ஆக இருக்கிற இந்த ராசிக்காரங்க இனி மிங்கிள்ஸ் ஆகப்போகிறீர்கள்.

ராஜயோக காலம்
மேஷ ராசிக்கு குருவின் பார்வையும் ராசியின் மேல் விழுவதால் குருவின் பரிபூரண ஆசியோடு அற்புதமான ராஜ யோகம் கிடைக்கும். ஒன்பதாம் பார்வையாக 5ஆம் வீட்டில் குரு பார்வை விழுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கும். பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். சிம்ம ராசிக்கு குரு ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து ராசியை பார்க்கிறார். திருமணம் நடைபெறும். உங்கள் ராசியை குரு பார்ப்பதால் மனதிற்குப் பிடித்த மனைவி அமைவாள். சந்தான பாக்கியம் கிடைக்கும்.

குடும்ப உறவு உற்சாகம்
தனுசு ராசிக்கு ஜென்ம குரு அமர்வதோடு அவர் பார்வையால் திருமணம் கைகூடி வரும் கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருபகவான் கும்ப ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து ராசிக்கு 3, 5, 7ஆம் இடங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டை களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும்.

கல்யாண கனவு நனவாகும்
இந்த குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்கு தைரிய குரு, ரிஷபம் ராசிக்கு அஷ்டம குரு, கர்ம குரு மீனம் ராசிக்கு உள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பம், சந்தான பாக்கியம் அமையும் யோகம் கூடி வருகிறது. கன்னி,கடகம்,மகரம் ராசிகளுக்கு இந்த முறை குரு பலம் இல்லை என்றாலும் சுப விரைய செலவுகள் தேடி வரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications