குரு பெயர்ச்சி 2019: மீன ராசிக்காரர் சசிகலாவிற்கு பத்தில் குரு - பலன்கள் எப்படி
Recommended Video
சென்னை: நிகழும் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12ஆம் தேதி 29 10 2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி 48 நிமிடத்தில் குருபகவான் வாக்கியப்படி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. ரிஷபம். கடகம். கன்னி. துலாம் தனுசு. மகரம். மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சில ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு மீனம் ராசி, சிம்ம லக்னம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் தனுசு ராசியில் அமரப்போகிறார். 'ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்' என்று சொல்வார்கள். மீனம் ராசிக்காரர்களுக்கு பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பார்கள். சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா. சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். சசிகலா ஜாதகத்தில் மீனம் சந்திரன் மிதுனத்தில் குரு கேது கடகத்தில் புதன் சிம்மத்தில் லக்னம் சூரியன் கன்னியில் சுக்கிரன் துலாமில் சனி தனுசுவில் செவ்வாய் ராகு என சசிகலாவின் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ளன.
ஜெயலலிதாவின் பின்னாடியே இருந்தவர் சசிகலா. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கட்சியில் முக்கிய பொறுப்புக்கு வந்தார். முதல்வராக நினைத்தால் அது முடியவில்லை. மாறாக சிறை சென்றார். விதி விடாமல் விரட்டுகிறது என்பது போல அடுத்தடுத்து நிகழ்ந்த சோக நிகழ்வுகள் சசிகலாவின் தூக்கத்தை தொலைத்து வருகின்றன. சமீபத்தில் கூட சிறை அறையில் நடந்த ரெய்டு அவருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாகவே குரு பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் சசிகலாவிற்கு சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும் அதேபோல வரக்கூடிய குரு பெயர்ச்சி சசிகலாவிற்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

சசிகலாவிற்கு சோதனை
சசிகலாவிற்கு செவ்வாய் திசை நடக்கிறது. முதல்வர் கனவில் இருந்த அவர் ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்குப் போனார். செவ்வாய் தசை ஆரம்பித்ததில் இருந்தே சிக்கல்தான். செவ்வாய் திசை சுக்கிரபுத்தி நடக்கும் போது சிறைக்குப் போன அவர் அடுத்தடுத்து பல சங்கடங்களை சந்தித்து வருகிறார் உறவினர்களின் மரணம், கணவரின் மரணம் என பல சோக சம்பவங்கள் நடந்துள்ளன.

சசிக்கு சாதகமில்லை
தனுசு ராசிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் சனிப்பெயர்ச்சி ஆனது முதலே அவருக்கு சாதகமற்ற பலன்கள் நடக்கத் துவங்கின. இப்போது தனுசுவில் சனியோடு கேது இணைந்திருக்க கூடவே குருவும் இணைகிறார். பத்தில் குரு அமர்கிறார். ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும் என்பது பழம்பாடம். குரு பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். மீனம் ராசிக்கு குரு பகவான் பத்தாம் வீட்டில் அமர்கிறார். மீனம் ராசிக்கு ராசி நாதனும் பத்தாம் அதிபதியுமான குருபகவான் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார்.

விடுதலை ஆக முடியாது
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் சசிகலா ஏற்கனவே பதவிகள் இழந்து புகழ் செல்வாக்கு இழந்து சிறையில் இருக்கிறார். சசிகலாவிற்கு 2021ஆம் ஆண்டு வரை தண்டனைக்காலம் உள்ளது அவர் தண்டனை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டும். அதே நேரம் நன்னடத்தை விதிகளின்படி தண்டனை காலம் குறைக்கப்பட உள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் சசிகலா விடுதலையாவார் என்றும் பேச்சு எழுந்தது. ஆனால் அப்படி எல்லாம் எதுவும் இல்லை சசிகலா இப்போதைக்கு விடுதலையாக வாய்ப்பே இல்லை என்றும் நன்னடத்தை விதிகள் சசிகலாவிற்கு பொருந்தாது என்றும் கர்நாடகா சிறைத்துறை இயக்குநர் கூறியுள்ளார்.

சனிப்பெயர்ச்சியில்தான் இடப்பெயர்ச்சி
சசிகலாவிற்கு குரு பெயர்ச்சி அத்தனை சாதகமாக இல்லை. அதே நேரத்தில் பத்தில் உள்ள சனி இடப்பெயர்ச்சியாக மகர ராசிக்கு போன பின்னர், அங்கே குரு இடப்பெயர்ச்சியாகி உச்சம் பெற்று அமரும் போது சசிகலாவிற்கு சிறையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று கோச்சார கிரகங்கள் உணர்த்துகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகாலமாகவே சசிகலாவிற்கு சிறையில்தான் தீபாவளி கொண்டாடுகிறார். அதே போல இந்த தீபாவளியும் சிறையில்தான் என்பது உறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications