குரு பெயர்ச்சி 2019-20: பதவி உயர்வு, விமானத்தில் பறக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்
Recommended Video
சென்னை: வாழ்க்கையில் ஜெயிக்க நல்ல வேலை அவசியம். திருமணத்திற்கு பெண் பார்க்கப் போனால் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் என்றுதான் கேட்பார்கள். வேலையே அமையலையே என்று வருத்தப்பட்டு வந்தவர்களுக்கு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சி காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு வேலை அமையப்போகிறது.
குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும், புதிய வேலை, வேலையில் புரமோசன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பாக்ய குருவினால் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பு அரவணைப்பு கிடைக்கும். புதிய வேலை, தொழில் வளர்ச்சி, புரமோசன் கிடைக்கும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆளுமை புகழ் கீர்த்தி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். என்ன தொழில் செய்தாலும் அது வெற்றிதான். தொட்டது துலங்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் பொன்னான கால கட்டம் வரப்போகிறது. வெளிநாடு வேலை வாய்ப்பு வரப்போகிறது. வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும். சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அமையும். புதிய வேலைகளால் நன்மை கிடைக்கும். திடீர் மாற்றம் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

கடகம்
கடகம் ராசிக்காரர்களே குருவின் பார்வை இம்முறை உங்க ராசிக்கு 10, 12வது வீடுகளின் மீது விழுகிறது. மேஷம் ராசி உங்களுக்கு தொழில் ஸ்தானம். உங்க ராசிக்கு 10வது வீட்டின் மீது குரு பார்வை படுவதால் போட்டி தேர்வில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். 12வது வீட்டின் மீது குரு பார்வை விழுவதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

சிம்மம்
சிம்மராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டம். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். சிம்மராசிக்காரர்கள் வெளிநாடு செல்லும் யோகம் வந்து விட்டது. பாஸ்போர்ட் விசா பிரச்சினைகள் தீரும். தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதிர்கள்.நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுங்கள் அதுதான் பாதுகாப்பு.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே உங்க ராசிக்கு பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் உத்யோகத்தில் பதவி உயர்வினால் முன்னேற்றம் ஏற்படும். ஜீவன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். நிரந்தரமான வேலை கிடைக்கும் காலமாகும். சிலருக்கு வேலையில் புதிய இடமாற்றம் ஏற்படும். வேலையே இல்லையே என்று நினைத்தவர்களுக்கு புது வேலை கிடைக்கும், சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும், நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிக் கிடந்த லாபம் எல்லாம் வரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். புதிய வேலை கிடைக்கும். இதுநாள் வரை திருப்தியில்லாமல் வேறு வேலை செய்தவர்கள் இனிமேல் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். கை நிறைய சம்பளமும் வரும். சிலர் வேலைக்காக வெளிநாட்டு பயணமும் செல்வீர்கள். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் இப்பொழுது பிறக்கிறது. இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகளைத் தருவார். வேலையில் பலருக்கு பிரச்சினை ஏற்பட்டது. இனி குரு பகவான் ஓயாமல் உழைக்க வைப்பார். உழைக்க தயங்காதீர்கள். நல்ல வேலை கிடைக்கும். ஊதிய உயர்வுடன் புதிய வேலை கிடைக்கும். இதுநாள் வேலைகளில் வேலை செய்யும் இடங்களில் இருந்த இருந்த பிரச்சினைகள் தீரும். பதவிகளும் பட்டங்களும் தானாக தேடி வரும்.

கும்பம்
குரு தனுசு வீட்டிற்கு வருவதால் வேலையில் உள்ள பிரச்சினைகள் தீரும். புரமோசன் கிடைக்கும். அரசாங்க வேலை, போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நல்ல வேலைக்கு முயற்ச்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கஷ்டபட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications