குரு பெயர்ச்சி 2020: தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப குருவினால் என்னென்ன யோகம் கிடைக்கும்
குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் குதூகலம் அடையப்போகிறீர்கள்.
சென்னை: குரு பகவான் தனுசு இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகமான கால கட்டம். தனுசு ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள். எதையும் நேருக்கு நேராக பேசி விடுவீர்கள். கடந்த பல காலங்களாக ஏழரை சனியால் பாதிப்பை அனுபவித்து வருகிறீர்கள். ஜென்ம குரு, ஜென்ம கேதுவும் கடந்த ஆண்டுகளில் மன இறுக்கத்தை கொடுத்து வந்தது. குரு பகவான் இரண்டாம் வீட்டிற்கு நகர்ந்து விட்டார். குடும்ப ஸ்தான குருவின் சஞ்சாரத்தினால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்கப் போகிறது.
சனிபகவான் குடும்ப சனியாக சஞ்சரிக்கிறார். குருவும் குடும்ப குருவாக சனியோடு இணைந்திருக்கிறார். ஜென்ம குரு உங்கள் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் கொடுத்து வந்தது. இனி கஷ்டங்கள் கவலைகள் நீங்கும். மகரம் ராசியில் அமர்ந்துள்ள குருபகவானின் பார்வை உங்க ராசிக்கு ஆறாம் வீடு, எட்டாம் வீடு பத்தாம் வீடுகளின் மீது விழுகிறது.
சுப காரியங்கள் நிறைய நடக்கும்.
தனுசு ராசியில் இருந்து குரு குடும்ப ஸ்தானத்திற்கு சென்று நீச்சமடைகிறார். நீச்ச பங்க ராஜயோகமாக மாறுவதால் மிகப்பெரிய மாற்றங்களை கொடுக்கும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பேச்சிலும் செயலிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி சந்தோஷம் நிம்மதி பிறக்கும். பொருளாதாராத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பிரச்சினைகள் நீங்கும்
வேலையில் நல்ல மாற்றமும் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். உங்களை விட்டு பிரிந்து போனவர்கள் தேடி வருவார்கள். நண்பர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்
தொழில் முதலீடுகளில் செய்யும் லாபத்தை கொடுக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராசியில் இருந்த சனியும், கேதுவும் குருவும் விலகி விட்டதால் இப்போது உங்களுக்கு இருந்த சுமைகள் விலகும் தடைகளும் விலகும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். வராத கடன்கள் கைக்கு வரும்.

திருமண யோகம்
உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். கடன் பிரச்சினைகள் நீங்கும். எதிர்பாராத வகையில் பண வரவு வரும். திருமண தடைகள் நீங்கும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். காதலிப்பவர்கள் வீட்டில் தகவலை சொல்லுங்கள் கல்யாண வாழ்க்கை கை கூடி வரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வலி வேதனைகள் தீரக்கூடிய காலம் வந்து விட்டது.

பிரச்சினைகள் தீரும்
பத்தாம் வீட்டை குரு பார்வையிடுவதால் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். இதுநாள் வரை இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும்.

கவனம் தேவை
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. ராசி அதிபதி நீச்சமடைவதால் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் ஆலங்குடியில் அருள்பாலிக்கும் குரு தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications