Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகரத்தில் சனியோடு இணையப்போகும் குரு பகவான் - இந்த ராசிக்காரங்களுக்கு ரொம்ப நல்லது

குரு பகவான் தனுசு ராசியில் இருந்து இருந்து அதிசாரமாக மகரம் ராசிக்கு செல்கிறார். பின்னர் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். இந்த அதிசார வக்ர சஞ்சாரம் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு என்னெ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sani Peyarchi 2020 | Mesham | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மேஷ ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: நவகிரகங்கள் ஒரு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் வேகமாக நகர்ந்து அடுத்த ராசிக்குச் செல்வதை அதிசாரம் என்று சொல்வார்கள். தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குருபகவான் மகரம் ராசிக்கு வேகமாக சென்று விடுவது அதிசாரம் எனப்படுகிறது. குரு பகவான் தற்போது தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து உள்ளார். அதிசாரமாக பங்குனி மாதம் 16ஆம் தேதி மார்ச் 29ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். பின்னர் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு ஜூலை மாதம் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி வரை குருவின் வக்ர காலம் நீடிக்கிறது. இதே குரு பகவான் பின்னர் நேர் கதியில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார்.

    நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் எப்பொழுதுமே நேர்கதியில் செல்வார்கள். சர்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்பொழுதுமே பின்னோக்கி நகர்வார்கள். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். சனி, குரு சில நேரங்களில் அதிசாரமாக செல்வார்கள். குருவானவர் தனுசு ராசியில் ஏறத்தாழ ஓராண்டு காலம் சஞ்சரிக்க வேண்டும். ஆனால் அவர் தனுசு ராசியில் இருந்து திடீரென மகரம் ராசிக்கு சென்று விட்டு பின்னர் பின்னோக்கி வக்ரமாக தனுசு வருவார். குருபகவான் அதிசாரம், வக்ரம் அடையும் போது ராசிகளுக்கு சில பலன்களைத் தருவார். வக்கிரம் பெற்ற கிரகங்கள் கெட்ட ஸ்தானங்களில் வக்கிரமானால் நற்பலன் களைத் தருவார்கள். சுப ஸ்தானங்களில் வக்கிரமானால் கெடுபலன்களைத் தருவார்கள்.

    நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. மார்ச் மாதத்தில் நிகழப்போகும் அதிசார வக்ர பெயர்ச்சியால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

    மகரத்தில் சனி குரு

    மகரத்தில் சனி குரு

    குரு பகவானின் ஆட்சி வீடு தனுசு. மகரம் ராசி சனிபகவானின் வீடு. தற்போது மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனி பகவானுடன் குரு பகவான் இணையப்போகிறார். மகரம் ராசி குரு பகவானுக்கு நீச வீடு. இந்த வீட்டில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குரு பகவான் பின்னர் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். ஜோதிடத்தில் குரு முன்னோர்களின் புண்ணியத்தை குறிப்பவராக போற்றப்படுகிறார். சனி முன்னோர்களின் கர்ம பலனை குறிபவராக போற்றபடுகிறார். குரு சனி இருவரின் சேர்க்கை ஜீவ கர்ம யோகம் என்ற நிலையை வழங்குகிறது. இந்த கூட்டணி சிலருக்கு பிரம்மஹத்தி தோஷ அமைப்பையும் தரும். ஆட்சி பெற்ற சனியோடு நீசம் பெற்ற குரு இணைவதால் குரு நீசபங்கமடைகிறார்.

    மேஷம்

    மேஷம்

    குரு பகவான் தற்போது உள்ள ஒன்பதாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டிற்கு குரு செல்வதால் நல்ல வேலை கிடைக்கும். வேலை நிரந்தரமாகும். அரசு வகையில் அனுகூலம் பிள்ளைகள் முன்னேறுவார்கள். புதுத்தெம்பு பிறக்கும். சோம்பேறித்தனம் மாறி சுறுசுறுப்பு அதிகமாகும். நேரம் காலம் பார்க்காமல் உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். பிள்ளைகளை கொஞ்சம் விட்டுப் பிடிங்க. வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும்.

    ரிஷபம்

    ரிஷபம்

    குரு பகவான் தற்போது அஷ்டம ஸ்தானத்தில் இருக்கிறார். சில மாதங்களில் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு செல்கிறார். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். வீடு கட்ட தொடங்குவீர்கள். இதுநாள் வரை உங்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் இருந்த மன இறுக்கங்கள் நீங்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி ஏற்படும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும். திருமணமான தம்பதியினருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கோ மகளுக்கோ வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    மிதுனம்

    மிதுனம்

    குரு பகவான் தற்போது களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் இருக்கிறார். அவர் அஷ்டன சனியோது அஷ்டம ஸ்தானத்தில் அமரப்போகிறார். நீங்கள் தடைகளை தாண்டி முன்னாறுவீர்கள். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். எதிர்ப்புகள் ஒழியும். எந்த காரியம் செய்யும் போதும் முன்னெச்சரிக்கை தேவை. கடன் வாங்கும் போது கவனம், ஜாமீன் கையெழுத்து போட்டு பிறருக்கு கடன் வாங்கி கொடுக்க வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். வெளியூர் பயணங்கள் நன்மையாக முடியும். திடீர் பணவரவு கிடைக்கும்.

    கடகம்

    கடகம்

    கடகம் ராசிக்கு தற்போது ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஏழாவது வீட்டிற்கு செல்கிறார். திடீர் பணவரவு கிடைக்கும். குரு அதிசாரமாக சஞ்சரிக்கும் போது தடைபட்ட தள்ளிப்போன சுப காரியங்கள் மள மளவென நடைபெறும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகமாகும். குரு வக்கிரமாக செல்லும் போது உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகமாகும். பொது விழாக்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் யோகம் வரும் சில நேரங்களில் வீண் அலைச்சல்கள் ஏற்படும். எங்கும் எதிலும் முன்னெச்சரிக்கையாக இருங்கள்.

    சிம்மம்

    சிம்மம்

    சிம்ம ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் அதிசாரமடைந்து ஆறாம் வீட்டிற்கு செல்வதால் எதிர்ப்புகள் கொஞ்சம் அதிகமாகும். கடனும் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டு பயணம் உங்களுக்கு சாதகமாக முடியும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் ஆகும். கோவில் விஷேசங்களை முன் நின்று நடத்துவீர்கள். வெளி வட்டாரங்களில் உங்களின் அதிகாரமும் செல்வாக்கும் உயரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சீக்கிரம் முடியும். உங்களின் அழகு அதிகரிக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகமாகும்.

    கன்னி

    கன்னி

    கன்னி ராசிக்காரர்களே சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் விரைவில் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். இதனால் உங்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். கொஞ்சி மகிழ குழந்தை செல்வம் உங்க வீட்டிற்கு வரப்போகிறது. உல்லாச பயணம் செல்வீர்கள் குடும்பத்தோடு செல்லும் பயணங்கள் உற்சாகத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+