குரு பெயர்ச்சி.. மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் குரு பகவான்.. சிறப்பு பூஜைகள்!
சென்னை: இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார் குரு பகவான். குரு பெயர்ச்சியையொட்டி தமிழ்நாட்டில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நவ கிரகங்களில் கல்வி, திருமணம், புத்திசாலித்தனம், குழந்தைகள், பணம், செல்வச் செழிப்பு ஆகியவற்றுக்கான கிரகமாக உள்ள குரு பகவான் இன்று மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மேஷ ராசியில் இருந்த குரு பகவான் மே மாதம் ஒன்றாம் தேதி, சித்திரை மாதம் 18ஆம் நாளான இன்று வாக்கிய பஞ்சாங்கப்படி மாலை 5.19 மணிக்கு குரு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதையொட்டி கோயில்களில் வாக்கிய பஞ்சாங்க நேரப்படி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற குரு பகவான் தலங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர்.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியான நிலையில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரஸ்வாமி திருக்கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, அங்கு பக்தர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளியங்காடு சிவன் கோவிலில் ஓம குண்டங்கள் வளர்த்து பரிகார பூஜைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திட்டக்குடி குரு கோயில், ஆவடி அருகே பாடியில் அமைந்துள்ள சிவன் கோயிலிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. குரு பகவானுக்கு பிரசித்தி பெற்ற கோவில்களில் எல்லாம் மக்கள் குவிந்து வழிபட்டு வருகின்றனர்.
குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்களை பெறும் என்பது ஐதீகம். அதன்படி, ரிஷப ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் கன்னி ராசியையும், ஏழாம் பார்வையால் விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையால் மகர ராசியையும் பார்க்கிறார் குரு.
குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பரிகார ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து குரு பகவானை வழிபட்டனர்.
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications