குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மீனம் ராசிக்கு பத்தில் குரு - பதவி உயர்வு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    23-07-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

    மதுரை: குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மீனம் ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் இருந்து ஜீவன ஸ்தானத்திற்கு வரும் குருபகவானால் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திரபாக்கியம் எப்படி என்று இருக்கும் பார்க்கலாம்.

    'ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும் என்பது பழம்பாடம். குரு பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். மீனம் ராசிக்கு குரு பகவான் பத்தாம் வீட்டில் அமர்கிறார். உங்கள் ராசி நாதனும் பத்தாம் அதிபதியுமான குருபகவான் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார் பத்தாம் வீட்டில் அமர்ந்தாலும் அதிக நன்மை செய்வார். மீன ராசிக்கு ஹம்ச யோக காலம். பத்தில் குரு புதிய பதவி தேடி வரும் பத்தில் குரு வரும் போது உயர்பதவிகள் தேடி வரும். வாழ்க்கை ரீதியான பயணத்தில் வெற்றி கிடைக்கும். வேலை தொழிலில் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அஞ்ச வேண்டாம். ஆளுமை தன்மையை அதிகரிப்பார். சகல ஹம்சத்தையும் தருவார்.

    குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு காதல் திருமணம் நடைபெறும் தெரியுமா

     மீன ராசிக்கு பதவி உயர்வு

    மீன ராசிக்கு பதவி உயர்வு

    பத்துக்கு அதிபனே பத்தில் இருப்பதால் பதவி உயர்வை தருவார். தனுசு வீடு ஆட்சி வீட்டில் இருப்பதால் தனித்தன்மை வாய்ந்த பார்வைகளை தருவார். வீழ்ச்சியில் இருந்தவர்களை உச்சத்திற்கு கொண்டு வருவார். கெடுதல் நடக்காமல் தடுப்பார். 9,10, 11 ஆகிய இடங்களில் குரு அமரும் காலத்தில் சுபமே நடக்கும் நல்ல பலன்களை வாரி வழங்குவார். அதை தவிர ஒரு கிரகம் தன்னுடைய வீட்டிற்கு கெடுதல் செய்யாது. உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கேது ஞானகாரகன் கேது உடன் இணையும் குரு பகவான் நன்மைகளை செய்வார். வாழ்க்கையில் கவுரவம், புகழ் ஏற்படும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சி

    குடும்பத்தில் மகிழ்ச்சி

    குருவின் பார்வை தன வாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களின் மீது விழுகிறது. குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடலாம். தன ஸ்தானத்தை பார்ப்பதால் தன வருமானம் வரும்பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள். திருமண தடைகள் நீங்கும். புதிய வருமானத்தை அதிகரிப்பார். இதுநாள் வரை வராமல் இழுத்தடித்த வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும்.

    வேலையில் உற்சாகம்

    வேலையில் உற்சாகம்

    நான்காம் வீட்டை பார்ப்பதால் சொத்து சுகம் பிரச்சினை தீரும் தொட்டில்கள் ஆடும் சத்தம் கேட்கும். குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் பிள்ளை இல்லாமல் தவித்து வந்தவர்களுக்கு குரு பகவான் பிள்ளை வரம் தரப்போகிறார். சொத்து சுகம் சேரும் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கிடைக்கும், வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குருவின் பார்வையால் பிரச்சினைகளை கஷ்டங்களை நிவர்த்தி செய்வார்கள். திட்டமிட்டு செயல்பட வைப்பார். வேலையில் ஏற்றமிகு பயணத்தை தருவார்.

    அம்மாவின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும். புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கூடி வரும்.

    உடலை வாட்டிய நோய்கள் நீங்கும்

    உடலை வாட்டிய நோய்கள் நீங்கும்

    தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். ரொம்ப நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நிங்கி நலமும் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். கடன்கள் கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும். தொழில் அபிவிருத்தி ஏற்படும். செய் தொழில் வளர்ச்சி பெறும். வேலை இழந்தவர்களுக்கு திரும்ப வேலை கிடைக்கும். நல்ல மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு மிகச்சிறந்த முன்னேற்றம்.

    பைரவர் வழிபாடு அவசியம்

    பைரவர் வழிபாடு அவசியம்

    உடல் நலத்தில் பிரச்சினைகள் வரும் மருத்துவ ஆலோசனை அவசியம். குருபகவான் சனி கேது உடன் இணைந்திருக்கும் போது சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். பைரவர் வழிபாடு மிகவும் அவசியம். சனி கேது இருக்கும் போது சிக்கல்கள் வரும் கூடவே குருவும் அமரும் காலத்தில் வரும் பிரச்சினைகள் தீர ஆன்மீக எண்ணங்கள் அவசியம். வீடுகளில் வேலை செய்யும் இடத்தில் ஆன்மீக அலை வீசட்டும். மகான்கள் சித்தர்களை வழிபடுங்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+