குரு பெயர்ச்சி 2019: சிம்ம ராசிக்காரர் ஸ்டாலினுக்கு குரு பெயர்ச்சி எப்படியிருக்கும்
குரு பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழப்போகிறது. திருமணம், வேலை, குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர் ஸ்டாலின்
சென்னை: குரு பகவான் பொன்னவன் தனது பொன்னான பார்வையால் பலரையும் சுபிட்சமடைய வைப்பார். குரு பார்வைக்காக பலரும் காத்திருக்கின்றனர். திருமணம் குழந்தை பாக்கியம், பணவரவு, வேலை போன்றவைகள் நல்ல நிலையில் கிடைக்க குருவின் அருள் அவசியம். எனவேதான் குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த குரு பெயர்ச்சி விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நிகழப்போகிறது. குரு பகவான் மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளை பார்க்கிறார். சிம்ம ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான குரு கூடவே குரு பார்வையும் கிடைப்பதால் இப்போதே உற்சாக நடைபோட ஆரம்பித்து விட்டனர். சிம்ம ராசிக்காரர் ஸ்டாலினுக்கு அவரது ஜாதகம், தசாபுத்தியின்படி இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம். அவரது ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பார்க்கும் போது பரிவர்த்தனை யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், விரின்சி யோகம், பர்வத யோகம், யவன யோகம், லட்சுமி யோகம் என பல யோகங்கள் உள்ளன. இத்தனை யோகங்கள் இருந்தும் முதல்வர் ஆகும் யோகம் இன்னும் கை கூடி வரவில்லை.
குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. கோச்சார ரீதியாக குரு சிம்ம ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்கிறார். குரு பகவான் ஐந்து மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி. அவர் ஐந்தாம் வீட்டில் அமரப்போகிறார். இது அற்புதமான பலன்களை தரப்போகிறது. குரு பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து சிம்ம ராசிக்கு பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானம், சிம்ம ராசியை பார்க்கிறார்.

யோகமான குரு பார்வை
குருபகவான் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார். ராசியை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும் ஐந்தாம் வீட்டில் ஆட்சியாக அமர்வதால் பொற்காலம் வந்து விட்டது. மூன்று மற்றும் நான்காம் வீட்டில் இருந்த குருவினால் பலவித குழப்பங்கள் இருந்தது. இனி இந்த குழப்பங்கள் தீர்ந்து நிம்மதியை தரப்போகிறார். ஐந்தாம் வீட்டில் குரு அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் குழப்பங்கள் தீரும். இந்த குரு பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் நன்மைகளையும் அள்ளித்தரப்போகிறது.

ஆசைகள் நிறைவேறும்
பொன்னவன் குருவின் பார்வை சிம்ம ராசி மீது முழுவதுமாக விழுவதால் தொட்டது துலங்கும் காலம் வந்து விட்டது. ஐந்துக்கு அதிபன் ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து சிம்ம ராசியை பார்க்கிறார். ஆழ் மனதில் உள்ள ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். நம்பிக்கை அதிகரிக்கும்.
உங்கள் ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழுது தான் கிடைக்க போகிறது.

மூத்த சகோதரரால் நன்மை
சிம்ம ராசிக்கு லாப ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் சொல்வாக்கும், செல்வாக்கும் பெருகும். எடுக்கிற காரியங்களில் வெற்றி கிடைக்கும் தொட்டவை துலங்கும். சகோதர உறவுகளினால் அன்பும் ஆதரவு கிடைக்கும். குறிப்பாக மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கவுரவம் கிடைக்கும்
குருவின் பார்வை 9 ஆம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். வழக்குகளில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள். சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம். 2020ஆம் ஆண்டு நிகழப்போகும் சனி பெயர்ச்சியும் சாதகமாகவே இருப்பதால் முக. ஸ்டாலினுக்கு எதிரிகள் தொல்லை ஒழியும்.
-
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications