Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2020 : குரு பார்வையால் யாரெல்லாம் காதல், கல்யாணம் செய்யப்போறீங்க தெரியுமா

தனுசு ராசியில் சஞ்சரித்த குருபகவான் இனி இடப்பெயர்ச்சியாகி மகரம் ராசியில் சஞ்சரிப்பார். குரு பகவானின் சுப பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பார்வை கோடி நன்மை. குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும். தனுசு ராசியில் சஞ்சரித்த குருபகவான் இனி இடப்பெயர்ச்சியாகி மகரம் ராசியில் சஞ்சரிப்பார். குருவின் பார்வை இந்த முறை ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது. கடந்த ஓராண்டு காலம் சிரமத்தை சந்தித்த இந்த ராசிக்காரர்கள் இனி நன்மைகளை அடைவார்கள். சிலருக்கு காதல் மலரும் கல்யாண யோகமும் வந்து விட்டது. இந்த குரு பெயர்ச்சி குரு பார்வையால் யாரெல்லாம் காதல் பறவைகளாகவும், கல்யாணம் முடிந்து இல்லறத்தில் இணையப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை', குரு பார்வை தோஷ நிவர்த்தி' என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது. குரு தனது 5ஆம் பார்வையால் ரிஷபம் ராசியை பார்க்கிறார். 7ஆம் பார்வையால் கடகம் ராசியை பார்க்கிறார். 9 ஆம் பார்வையால் கன்னி ராசியை பார்க்கிறார்.

குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 15ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். வரும் 20ஆம் தேதியன்று திருக்கணித்தப்பஞ்சாங்கப்படி இடம்பெயர்கிறார். இந்த இரண்டு நாட்களிலும் குரு பரிகார தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குரு பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் 90 கிட்ஸ் யாரெல்லாம் கல்யாண பந்தத்தில் இணையப்போகிறீர்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் குரு அமர்வது பாதகத்தை ஏற்படுத்தாது. குருவின் பார்வை 2ஆமிடம், 4ஆம் இடம், 6 ஆம் இடங்களின் மீது விழுவது சிறப்பான அம்சம். குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். புது வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷபம்

கடந்த சில ஆண்டுகாலமாகவே சிரமத்தை சந்தித்து வரும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது. பாக்கிய குருவாக 9ஆம் இடத்தில் குரு அமர்வது சிறப்பானது. குருவின் குருவின் பார்வை ராசியின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். ராசிக்கு 3ஆம் இடம், 5 ஆம் இடங்களின் மீது குருவின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களினால் வருமானம் உண்டு. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். குழந்தைகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீடு மீதும், சுக ஸ்தானமான 4ஆம் வீடு மீது, விரைய ஸ்தானமான 12வது வீடு மீதும் விழுகிறது. குரு அஷ்டம ஸ்தானமாக சனி பகவானுடன் அமர்ந்து தனது அருட்பார்வையால் உங்கள் குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குடும்பம் குதூகலமாக அமையும், கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். பேசும் வார்த்தையில் இனிமை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சுப விரையங்கள் அதிகம் நடைபெறும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 7ஆம் வீட்டில் அமர்ந்து தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார் குருபகவான். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். குருபலன் வந்து விட்டது திருமணம் கைகூடி வரும். காதல் வெற்றியடையும். 9ஆம் பார்வையால் உங்களின் முயற்சி ஸ்தானமான 3 ஆமிடத்தை பார்வையிடுவதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். 5ஆம் பார்வையால் உங்க லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். பாக்கெட் நிறைய பணம் வரும்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான ருண ரோக ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 2ஆம் வீடு, 12ஆம் வீடு 10ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். குடும்பத்தில் உற்சாகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். மறைந்திருந்த நோய்கள் வெளிப்படும். நோய்களை குணப்படுத்த பணம் வரும். வெளிநாடு செல்லும் யோகம் வரும் சுப விரையம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு பதவியில் மாற்றம் வரும். சந்தோஷமான சம்பவங்கள் அதிகம் நடைபெறும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானம் 9ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வையிடுகிறார். உங்களுக்கு குரு பலன் வந்து விட்டுவிட்டது. வெளியூர், வெளிநாடு பயணம் செல்லக்கூடிய நேரம் வந்து விட்டது. 11 ஆம் வீட்டை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும். திருமண யோகமும் குழந்தை பாக்கியமும் கைகூடி வருகிறது.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, குருபகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்கிறார் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானம், ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானம், ராசிக்கு 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். இந்த பார்வை விஷேசமான பலன்களை உங்களுக்குத் தரும். புதிய தொழில் தொடங்கலாம். பணி செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். 8 ஆம் வீட்டை பார்வையிடுவதால் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் கிடைக்கும். சிலருக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்யலாம் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் அமர்கிறார். குருவின் பார்வை 11ஆம் வீடான லாப ஸ்தானம். 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம், 7ஆம் இடமான களத்திர ஸ்தானங்களின் மீது விழுகிறது. காதல் மலரும் காலம் இது. காதல் கணிந்து கல்யாணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் சத்தம் கேட்கும். 9ஆம் இடத்தை பார்வையிடுவதால் வெளிநாடு செல்லும் யோகம் வரும். செய்யும் தொழிலில் லாபம் வரும். மூத்த சகோதரரின் மூலம் நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

ஜென்ம குருவாக இருந்து தடைகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த குரு பகவான் இன்று முதல் குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார். தன ஸ்தானம், வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து குரு உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான கடன் ஸ்தானம், 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானம், 10ஆம் வீடான தொழில் ஸ்தானங்களை பார்வையிடுகிறார். கடந்த ஓராண்டு காலமாக நீங்கள் பட்ட கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. நோய்கள் தீரும் காலமும் வந்து விட்டது. உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். உற்சாகமான குருப்பெயர்ச்சி இதுவாகும்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கு இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில் இருந்த குரு ஜென்ம குருவாக அமர்கிறார். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, 9ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும். மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அப்பாவின் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன்,உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். குருவின் பார்வை சுக ஸ்தானமான 4ஆம் வீடு, ரோக ஸ்தானமான 6 ஆம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ஆம் வீட்டின் மீது விழுகிறது. இந்த ராசிக்காரர்கள் விரைய சனியால் கவலைப்பட்டாலும் இனி குரு பெயர்ச்சியினால் பிரச்சினைகள் நீங்கும் சொத்து வாங்கலாம். புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும், கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. ஆயுளுக்கு வந்த கண்டம் நீங்கும். சனியால் ஏற்படும் சங்கடங்களை தீர்க்கப் போகிறார் குரு பகவான்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே உங்கள் ராசி நாதன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பான அம்சமாகும். குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான 3ஆம் வீடு, பூர்வீக புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீடு, களத்திர ஸ்தானமான 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பார்வையால் உங்கள் வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். இந்த குருப்பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+