குரு பெயர்ச்சி பலன் 2022: பதவியில் மாற்றத்தை தரப்போகும் குரு பகவான் - ஹம்சயோகமும் வருமாம்

குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். குருவின் பார்வைகள் மற்றும் பயணத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு ஹம்ச யோகத்தை தரப்போகிறார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: பத்தாம் வீட்டில் அமரும் குரு பகவான் பதவியில் மாற்றத்தை தருவார். சிலருக்கு புரமோசனைத் தருவார். ஹம்ச யோகமும் மிதுன ராசிக்காரர்களுக்கு வரப்போகிறது. பத்தில் குரு பயணித்தால் பதவி பறிபோகும் என்ற பயம் வேண்டாம். மிதுன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான் இப்போது மீன ராசியில் பயணம் செய்கிறார். குரு பகவானின் சொந்த வீடு மீன ராசி. தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரும் குரு பகவான் அனைத்து ராசியினருக்கும் நன்மைகளையே செய்வார். சிலருக்கு ஜாதகத்தில் உள்ள தசாபுத்திப்படி சோதனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று பார்க்கலாம்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் பத்தாம் வீட்டு அதிபதி. உங்களுக்கு பாதகம் எதுவும் செய்ய மாட்டார். தொழில் ஸ்தான அதிபதி பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து ஹம்ச யோகத்தை தரப்போகிறார். சனியும் உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் இருந்து விலகுகிறார். உங்களுக்கு வேலையில் நல்ல மாற்றத்தை தருவார். அதிகாரப் பதவியைத் தருவார்.

வாழ்க்கையில் முன்னேற்றம்

வாழ்க்கையில் முன்னேற்றம்

உங்களுடைய தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வீண் பழி நீங்கும். உங்களின் தனித் திறமை அதிகரிக்கும்.

சுகமான குரு பார்வை

சுகமான குரு பார்வை

குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டின் மீது விழுகிறது. குருபகவான் அருளால் வண்டி வாகனம் வாங்கும் யோகம் கை கூடி வரும். வீடு கட்டும் யோகம் கை கூடி வரும். சிலர் புதிய வீடு வாங்கும் யோகம் தேடி வரும். சில இருக்கும் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு மாறுவார்கள். அம்மாவின் உடலில் இருந்த நோய்கள் நீங்கும். உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேக பலம் அதிகரிக்கும்.

கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்

கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அலுவலகத்தில் ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் எதிரிகள் தொல்லை நீங்கும். நோய்கள் நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். பொருளாதார வளம் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. குரு தரும் ஹம்ச யோகத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+