Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023: கஜகேசரி யோகம்.. ஹம்ச யோகம்.. யாருடைய ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் புனிதமாகும், அதே போல ஒருவரின் ஜாதகத்தில் குரு சந்திரன் செவ்வாய் போன்ற கிரகங்களுடன் இணைவதை பொறுத்தும் சில யோகங்கள் கிடைக்கின்றன. கஜகேசரி யோகம், குரு சந்திர யோகம் அமையப்பெற்ற ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தையும் பணவரவையும் கொடுக்கும். உங்களுடைய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கிறதா என்று பலன்களை செக் செய்து கொள்ளுங்கள்.

குரு பகவான் ஒரு சுப கிரகம். குரு பார்வை பட்டால் போதும் தோஷங்கள் நீங்கும் சந்தோஷங்கள் அதிகரிக்கும். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் இருப்பதைப் பொருத்தும் கிரகங்களுடன் கூட்டணி சேருவதைப் பொருத்தும் அந்த ஜாதகருக்கு நன்மைகள் ஏற்படும். யோகங்களும் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். குரு தரும் யோகங்கள் உங்க ஜாதகத்தில் இருக்கா என்று பாருங்கள்.

Guru Peyarchi palan 2023: Gaja Kesari Yogam and Hamsa yogam formed Jupiter and Moon conjunction in Jathagam

நவ கிரகங்களில் முதன்மை பங்கு வகிப்பவராகவும் சுப கிரகமாகவும் குரு பகவானை குறிப்பிடுகிறோம். யோகங்களை கொடுப்பதிலும், அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதிலும் குரு முதன்மையான பங்கு வகிக்கிறார். கெஜகேசரி யோகம், ஹம்ச யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், கோடீஸ்வர யோகம், சண்டாள யோகம், சகடையோகம் உள்ளிட்ட பல யோகங்கள் குரு இருக்கும் இடத்தைப் பொருத்தும் கோள்கள் கூட்டணி மற்றும் பார்வையை பொருத்தும் இந்த யோகங்கள் அமைகிறது.

குரு சந்திரன் இணைப்பு மற்றும் தொடர்பின் காரணமாக குருசந்திர யோகம், கஜகேசரி யோகம், சகட யோகம் போன்ற யோகங்கள் ஏற்படும்.
ஜாதகத்தில் சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தாலும், குரு இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 ஆகிய குருவின் பார்வையில் சந்திரன் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கஜகேசரி யோகம். குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கஜ கேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். கல்வியில் பிரகாசிப்பார்கள்.

ஹம்ச யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெறுவது ஹம்சயோகமாகும். இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு கிடைக்கும்.
ஜாதக ரீதியாக ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு அம்சமான வாழ்க்கை அமையும். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அவரது சொந்த ராசியான தனுசு ராசியிலேயோ, மீன ராசியிலேயோ இருந்தாலும், குரு பகவான் உச்சம் பெறும் ராசியான கடக ராசியிலே சஞ்சாரம் செய்தாலும் அந்த ஜாதகருக்கு ஹம்ச யோகம் ஏற்படுகிறது.

ராஜயோக அமைப்பு: பிறந்த ஜாதகத்தில் கேந்திரங்களான 1, 4, 7,10 ஆகிய நான்கு இடங்களில் ஏதேனும் ஒன்றில் குரு வலுப்பெற்று அமரவேண்டும். இந்த ஹம்ச யோகத்தில் பிறந்த ஜாதகர்களின் குடும்பம் ராஜயோக அம்சத்துடன் இருப்பார்கள். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல உயரமான தோற்றத்தையும், சந்தன நிறம் அல்லது பொன் நிற மேனியையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் முகத்தில் இயற்கையாகவே ஒரு தெய்வீக தேஜஸ் இருக்கும். இயற்கையாகவே பிறரை வசீகரிக்கக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பல விதமான சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்து பண்டிதர்களாக இருப்பார்கள். அதை பிறருக்கு உபதேசம் செய்வார்கள்.

கஜகேசரி யோகம்: ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ஆம் இடங்களில் குரு காணப்பட்டால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, எடுத்த காரியங்களில் வெற்றி போன்றவை அமையும்.

Guru Peyarchi palan 2023: Gaja Kesari Yogam and Hamsa yogam formed Jupiter and Moon conjunction in Jathagam

குரு மங்கள யோகம்: குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10 ஆம் வீட்டில் செவ்வாய் பகவான் அமைந்திருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். இந்த யோகம் அமைந்த ஜாதகருக்கு வீடு, மனை சொத்து சுகத்தோடு சந்தோஷமாக வாழ்வார்கள்.
ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அந்த ஜாதகர் ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும்.

சகட யோகம்: சந்திரனுக்கு 6,8,12ல் குரு மறைவு பெற்றால் சகட யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்க்கை வண்டி சக்கரம் போல ஏற்றத் தாழ்வுகள் உடையதாக இருக்கும். ஆனால் குரு அமையப் பெற்றிருக்கும் வீடு சுபர் வீடாக இருந்தால் பெரிய கெடுதிகள் எதுவும் ஏற்படாது பயப்பட வேண்டாம். வாழ்க்கையில ஏற்றத்தாழ்வுகள் ரொம்ப சகஜம்தானே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+