குரு பெயர்ச்சி பலன் 2023.. முடிவுக்கு வரும் குரு சண்டாள தோஷம்.. கோடிகளை குவிக்கும் ராசிக்காரர்கள்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். ராகு உடன் கூட்டணி அமைத்து 6 மாதங்கள் பயணம் செய்த குரு பகவான் இனி தனித்த குருவாக பயணம் செய்வார். குரு சண்டாள தோஷம் முடிவுக்கு வரப்போகிறது. மேஷ ராசியில் தனித்த நிலையில் பயணம் செய்யும் குரு பகவான் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார்.

துலாம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு நேர் எதிரில் பயணம் செய்கிறார். ராகுவை விட்டு விலகி விட்டார் குரு பகவான். 7ஆம் வீட்டில் பயணம் செய்வதால்
குரு நன்மை செய்வார் என்று எண்ணி துணிந்து இறங்கி விடாதீர்கள். கொஞ்சம் நிதானமாக செயல்படுவது நல்லது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் புது தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும்.அனுசரித்துச் செல்லவும். அஷ்டம குருவினால் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க குரு காயத்ரி மந்திரங்களை சொல்லி வியாழக்கிழமை விளக்கேற்றி வழிபடவும்.
விருச்சிகம்: குரு பகவான் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும்.ஆனால் பிற்பகுதியில் கவனமாக இருக்க வேண்டும். கடன்,நோய் சம்பந்தப்பட்ட வகையில் மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். வேலை முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. யாரை நம்பியும் பணத்தை கடனாக தர வேண்டாம். கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் குரு பெயர்ச்சி அடைகிறார். ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு உங்கள் ராசியை நேர் எதிரே பார்வையிடுவதால் வெற்றிகளை குவிக்கப்போகிறீர்கள். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.
தனுசு: உங்களுக்கு பொற்காலம் தேடி வந்து விட்டது. தொட்டது பொன்னாகும் யோக காலம் என்றே சொல்லலாம். ராசி நாதன் குரு 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீங்கள் எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீங்கள் மனதில் வைத்திருக்கும் காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும். தடை நிகழும். இருப்பினும் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். இன்னும் 6 மாத காலத்திற்கு நீங்கள்தான் ராஜா. கோடிகளை குவிக்கப்போகிறீர்கள்.
மகரம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். பலருக்கும் வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும். மனைவி அல்லது தாய்க்கு உடல் நலத்தில் பிரச்சினைகளை கொடுக்கும். புது முயற்சிகளில் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கும் நேரம் வந்து விட்டது. குரு பகவான் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார் குரு பகவான். பொற்காலம் தொடங்கப்போகிறது. ஏழரை சனி காலமாக இருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்: முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்வதால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் கட்டுக்கள் இருக்கும் அல்லது உதவி புரிவதற்கு ஆட்கள் வருவார்கள்.சுக்கிரன் சாரத்தில் குரு செல்லும் போது தங்கள் எண்ணங்கள் நிறைவேறும். சகோதர, சகோதரிகள் வகையில் மனஸ்தாபங்கள் நிகழும். கவனம் தேவை. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் சுகங்களையும் சந்தோஷங்களையும் அனுபவிக்கப்போகிறீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.
மீனம்: குரு பகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த விசயங்கள் தங்களுக்கு சாதகமாக முடியும். தொழில் ரீதியான முன்னேற்றம் நிகழும். வம்பு, வழக்கு ,நீதிமன்ற வழக்குகள் தங்களுக்கு சாதகமாக வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாக்கில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வக்கீல்,ஆன்மீக வாதிகள்,ஜோதிடர்களுக்கு சிறப்பான காலம் இது. குரு ராகுவை விட்டு விலகியதும் வியாபாரம் தொழிலில் ஆதாயம் பெருகும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு எதையும் யோசித்து செய்யவும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications