மேஷ ராசியில் குரு ராகு சேர்க்கை.. குரு சண்டாள யோகம்.. யாருக்கு ஜாக்பாட்.. ஜோதிடம் சொல்வதென்ன?
சென்னை: குருபகவான் நவகிரகங்களில் சுப கிரகம். செல்வம், செல்வாக்கு, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் என மனிதர்களுக்குத் தேவையான அத்தனை நன்மைகளையும் செய்பவர். எனவேதான் குரு ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். குருவும் ராகவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலும் ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது இதனால் எதிர்பாராத விதமாக திடீர் அதிர்ஷ்டங்களும் உண்டாகும்.
குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் சிறப்படையும். சுப கிரகமாக இருப்பதால் அவருக்கு பார்வை பலம் சுபமாக உள்ளது குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும். கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் என்பதால்தான் குரு பார்வை கோடி நன்மையைத் தரும் என்று சொல்கின்றனர். குரு பகவான் தனித்து இருப்பதை விட எந்த வீட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருப்பது நல்லது தனித்த குருவினால் பாதிப்பு ஏற்படும்.

குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தால் குரு சண்டாள யோகம் ஏற்படும் ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும் இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் இந்த யோகம் அமைப்பை பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தன வரவையும் உண்டாக்கும் பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும். தற்போது கோச்சாரப்படி மேஷ ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருக்கின்றன. குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசியின் மீது விழுகிறது.
குருவும் ராகுவும் எந்த ராசியில் சேர்ந்திருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷத்தில் குருவும் ராகவும் நின்றால் இரட்டை நாக்கு கொண்டவர்களாக இருப்பார்களாம். அதே நேரத்தில் அவர்களுக்கு பண வரவிற்கும் பஞ்சம் இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. விருச்சிகத்தில் குருவும் ராகவும் இருந்தால் தன்னைத் தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேறுவார்களாம்.
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபத்தில் குருவும் ராகுவும் இருந்தால் இவர்களுக்குப் பிறகு பிறக்கும் சகோதரர் அல்லது சகோதரியே மிக பெரிய அளவில் சாதிப்பார்கள் அதீத தன்னம்பிக்கையோடு இருப்பார்களாம். துலா ராசியில் குருவும் ராகுவும் இருந்தால் எந்த ஒரு செயலிலும் தீவிரமாக செயல்படுவார்களாம்.
புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசியில் குருவும் ராகுவும் இருந்தால் தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும்
கன்னி ராசியில் குருவும் ராகுவும் இருந்தால் வாழ்க்கைத் துணைவர் வழியே நிறைய உதவிகள் கிடைக்குமாம். கடக ராசியில் குருவும் ராகுவும் நின்றிருந்தால் பூர்வீக சொத்து விஷயத்தில் பிரச்சனைகள் வந்து நீங்குமாம். சிம்ம ராசியில் குருவும் ராகுவும் இருந்தால் பங்கு சந்தையில் லாபம் அதிகரிக்கும்.
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசியில் குருவும் ராகுவும் இணைந்து இருந்தால் திறமைசாலிகளாகவும் பல துறைகளில் வேலை பார்ப்பார்களாம். மீனம் ராசியில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் அக்குவேறு ஆணிவேராக எதையும் அலசுவார்கள் அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்து விடுமாம்.
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசியில் குருவும் ராகவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்களாம். கும்ப ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் சிலர் யோக மாஸ்டர்களாக இருப்பார்கள் பழைய எதிரிகளை மறக்க மாட்டார்களாம். பிறந்த ஜாதகத்தில் குருவும் ராகுவும் இணைந்திருப்பவர்கள் வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு உரிய பரிகாரங்களை செய்து வழிபாட்டால் நன்மை ஏற்படும் என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications