குரு பெயர்ச்சி பலன் 2023: பரணி நட்சத்திரத்தில் குருவின் பயணம்..கோடிகளில் புரளும் ராசிக்காரர்கள்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். இன்னும் சில வாரங்களில் குரு பகவான் சுக்கிரபகவானின் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். இந்த நட்சத்திர மாற்றத்தினால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரப்போகிறது. குரு நட்சத்திர பெயர்ச்சியால் துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்: குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேரடியாக பார்க்கிறார். தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் நடைபேறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப விசயத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குடும்ப விசயத்தில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம்.
விருச்சிகம்: இதுநாள் வரைக்கும் வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் தொடங்குவீர்கள். வீட்டில் சுப விரையங்கள் ஏற்படும். சுப காரியங்கள் கை கூடி வரும். அண்ணன் தம்பிகள் சகோதர சகோதரிகளிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். அரசியல்வாதிகளுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

தனுசு: பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்வதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக இது அமைந்துள்ளது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும்.
மகரம்: குரு நான்காம் வீட்டில் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிக்கு வெற்றிகள் தேடி வரும். நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. பெண்களுக்கு இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும் பொற்காலம் தேடி வரப்போகிறது.

கும்பம்: உங்களுக்கு வெற்றிகரமான குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. குருபகவானின் பார்வையால் திருமண தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். உடலில் இருந்த நோய்கள் நீங்கும். குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள் காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.

மீனம்: உங்க ராசிநாதன் குரு பகவான் உங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் வீடான மேஷ ராசியில் பயணம் செய்கிறார். நோய் பாதிப்புகள் நீங்கும். பெரியோர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். பரணியில் பயணம் செய்யும் குருவினால் அஷ்டலட்சுமி யோகம் தேடி வரும். அதிர்ஷ்டத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications