குரு பெயர்ச்சி பலன் 2023.. பிரியும் கூட்டணி.. 2024 முதல் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். ராகு உடன் கூட்டணி அமைத்து 6 மாதங்கள் பயணம் செய்த குரு பகவான் இனி தனித்த குருவாக பயணம் செய்வார். குரு பகவானுக்கு செவ்வாய் பார்வை கிடைப்பதால் குரு மங்கள யோகம் உருவாகிறது. மேஷ ராசியில் தனித்த நிலையில் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவானால் 2024ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: ஜென்ம குரு ராகு உடன் கூட்டணி அமைத்திருந்த நிலையில் தனித்த குருவாக பயணம் செய்யப்போகிறார். சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சொந்த முதலீடுகள் வேண்டாம். 2024ஆம் ஆண்டு குரு பகவான் இரண்டாம் வீட்டிற்கு பயணம் செய்யும் காலத்தில் பண வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்: குரு பகவான் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யோகம் அதிகம். ஆரம்ப காலமும் முடிவு காலமும் சோதனையாக இருந்தாலும் இடைபட்ட காலங்களில் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். குரு பகவான் பார்வையால் வெளி மாநிலம் அல்லது வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். குரு பகவான் 2024ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு வரப்போகிறார். ஜென்ம குரு என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
மிதுனம்: அஷ்டமத்து சனியால் வேலை தொழில் ரீதியாக சிரமமான சூழ்நிலைகளை சந்தித்தவருக்கு குரு பகவான் நிறைய நன்மைகளை கொடுத்து வருகிறார். வேலை செய்யும் இடத்தில் கேட்ட இடத்திற்கு இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும். லாட்டரி, பங்குச்சந்தையில் திடீர் லாபம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு வரப்போவதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்: குரு பகவான் தற்போது தொழில் ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்தார். மேஷ ராசியில் உள்ள கூட்டணி பிரியப்போகிறது. குரு பகவான் தனித்த குருவாக தொழில் குருவாக பயணம் செய்வதால் தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும். கேது,8-க்குடையன்,6-க்குடையவன் சாரத்தில் குரு செல்ல இருப்பதால் கடன், தடை என்பது அதிகமாக இருக்கும். செய் தொழிலை விட்டு வேறு தொழில் அல்லது வேலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. சனி 11-ல் செல்வதால் குரு பெயர்ச்சியின் மத்தியில் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.
சிம்மம்: குரு பகவான் சிம்ம ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். 9ஆம் இடம் தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். ஆன்மீக பயணங்களை செய்வீர்கள். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். பெண்கள் தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம். பெட்டி நிறைய தங்கம் சேரப்போகிறது. ஜோதிடம், ஆன்மீகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
கன்னி: அஷ்டம குரு என்று பயப்படுத்துவார்கள்.பயப்பட வேண்டாம். உங்களுக்கு அஷ்டம குரு நன்மையே செய்வார். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் குரு பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போவதால் உங்களுடைய பிரச்சினை படிப்படியாக குறைந்து நன்மைகள் ஏற்படும். குரு பார்வையால் புது வித முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். குரு பகவான் உங்கள் கனவுகளை நனவாக்குவார். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications