குரு பெயர்ச்சி பலன் 2023: அள்ளித்தரப்போகும் குரு.. அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
சென்னை: குரு பகவான் ரிஷபம் ராசிக்கு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். செப்டம்பர் மாதம் முதல் குரு பகவான் வக்ரமடைகிறார். குருவின் பார்வை ரிஷபம் ராசிக்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. குரு வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
ரிஷபம்: குரு பகவான் உங்களுக்கு லாப ஸ்தான அதிபதி. அஷ்டம ஸ்தான அதிபதி. நிறைய லாபத்தையும் மகிழ்ச்சியும் தருவார் குரு பகவான். குருவின் பார்வை உங்க லக்னத்திற்கு நான்கு, ஆறு, எட்டு ஆகிய இடங்களான சுக ஸ்தானம், கடன் ருண ரோக சத்ரு ஸ்தானம், ஆயுள் ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த கால கட்டங்களில் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலனை தரப்போகிறது. கடன் பிரச்சினைகள் தீரும். நிறைய சோதனைகளை கொடுத்து அதை சாதனைகளாக மாற்றுவார் குரு. 12ஆம் வீட்டில் ராகுவும் பயணம் செய்கிறார். நிறைய சுப விரைய செலவுகள் வரும்.

விபரீத ராஜயோகம்: 12ஆம் இடம் மோட்ச ஸ்தானம். இந்த வீட்டில் அமர்ந்து ராகு உடன் வக்ர கதியில் பயணம் குருபகவான். தொழில், கல்விக்காக சுப பயணங்களை செல்வீர்கள். வீடு வாங்க வேண்டும், வீடு மாற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வீடு கிடைக்கும். கடன், எதிர்ப்பு, நோய்கள் சங்கடங்கள் தீரும். பிரச்சினைகளை தீர்ப்பதுதான் இந்த விபரீத ராஜயோகம். அஷ்ட ஸ்தான அதிபதி 12ஆம் வீட்டில் பயணம் செய்யும் காலத்தில் திடீர் பண வருமானம் வரப்போகிறது.
குருவின் பார்வை: அஸ்டம ஸ்தானத்தில் குருவின் பார்வை விழும் காலத்தில் சங்கடங்கள் குறையும், பிரச்சினைகள் தீரும், குருபகவான் உங்களின் செலவுகளை நேர்மறை செலவுகளாக சுப விரைய செலவுகளாக மாற்றுவார். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குருபகவானின் பார்வை ஆறாம் வீட்டின் மீது விழுவதால் நோய்கள் வெளிப்படும். உணவு விசயத்தில் கவனம் தேவைப்படும். சிலருக்கு அஜீரணக்கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கண்ட நேரங்களில் கண்ட பொருட்களை சாப்பிட வேண்டாம். சாப்பாடு விசயத்தில் கவனமாக இருங்கள்.
பண விசயத்தில் கவனம்: இந்த குரு பகவான் மிகப்பெரிய சந்தோஷத்தையும் பண வருமானத்தையும் தரப்போகிறார். விரைய செலவுகளை தவிர்த்து விடுங்கள். நண்பர்கள் மூலம் கருத்து வேறுபாடுகள் வரலாம். பணம் விசயத்தில் கவனமாக இருக்கவும். எதையும் யோசித்து செய்யவும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உங்களின் பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை நீங்கும்.

வேலையில் புரமோசன்: வேலை மாற்றத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு கை நிறைய சம்பளத்தில் புரமோசனும் கிடைக்கும். வேலையில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு வெளிநாடு, வெளியூர் வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். அதிகம் கடன் கிடைக்கிறதே என்று நிறைய கடன்பட வேண்டாம்.
குருவிற்கு பரிகாரம்: குரு பகவானால் ஏற்படும் சோதனைகள் நீங்குவதற்கு வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவானை விளக்கேற்றி வணங்கவும். குரு பெயர்ச்சிக்கு யாகம் செய்ய பாதிப்புகள் குறையும். சுக ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் கடன் நோய்களை கொடுப்பது போல கொடுத்து தீர்ப்பார். ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை நீட்டிப்பார். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு நிறைய வருமானத்தை கொடுக்கும் குருபகவான் அதற்கேற்ப செலவுகளையும் தரப்போகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications