குரு பெயர்ச்சி பலன் 2023: குரு வக்ரம்.. பூர்வீக சொத்துக்களால் கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும்?
சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு நோய்கள் நீங்கும்.. குரு பகவானின் பார்வையாலும் வக்ர பயணத்தாலும் தனுசு ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வந்து விட்டது.
குரு பகவான்: நவ கிரகங்களில் சுபகிரகமான குரு பகவானின் பார்வை பலவித தோஷங்களை நீக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். குரு பகவான் வக்ர நிலையில் அஸ்வினி, பரணி நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகிறார். குருவின் பார்வை விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வீடு, 12வது வீடு, 10வது வீடுகளின் மீது விழுவதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும், வீடு, நிலம் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு ராசியின் மீது குரு பகவான் பார்வை விழுகிறது. ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீதும் குரு பார்வை விழுவதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

விருச்சிகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தான அதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. ருண ரோக சத்ரு ஸ்தானமான 6ஆவது வீட்டில் குரு பகவான் வருவது ஒரு வகையில் நன்மையே. அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திறமை அறிவுக்கு ஏற்ற அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும் .பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும். தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு மனை, வாங்கும் வாய்ப்பும் வரும். வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது. இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும்.
உங்கள் ராசிக்கு 2 ஆம் வீடான குடும்ப ஸ்தானத்தை தனகாரகன் குருவே பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாழக்கிழமை சித்தர்கள் ஜிவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது.

தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் ஸ்தானத்தில் குரு பகவான் வக்ரமடைகிறார். உங்கள் ராசி அதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியுமான குரு பகவான் உங்கள் ராசியை பார்த்ததால் தொட்டது துலங்கும். உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார் குரு பகவான். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
லாப ஸ்தானமான 11 ஆம் பாவத்தை குரு பகவான் பார்ப்பதால் வழக்கு பிரச்சினைகளில் சிக்கி இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம். சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். உங்களுடைய ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம். வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும். வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் தேடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்கள் செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன்கள் இப்பொழுது தான் கிடைக்க போகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications