குரு வக்ர பெயர்ச்சி பலன் 2023: புது வேலை... புரமோசன்.. கலக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்க்கும் வேலை போர் அடிக்கிறதே வேறு வேலை மாறலாமா? அல்லது இதே வேலையில் நீடிக்கலாமா என்று எத்தனையோ பேர் யோசித்துக்கொண்டிருக்கின்றனர். குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யும் போது செப்டம்பர் மாதம் வக்ரமடைகிறார். குரு வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

குருபகவான்: பொன்னவன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. எனவேதான் திருமணம், குழந்தை பாக்கியம், வேலையில் உயர்வு, வருமானத்தில் உயர்வு, நோய் நொடியற்ற வாழ்க்கை வேண்டும் என்று விரும்புபவர்கள் குரு பகவானின் அனுக்கிரகம் அவசியம் என்று எதிர்பார்க்கின்றனர்.

Guru peyarchi palan 2023: Guru Vakra Peyarchi Palan Mesham rasi Palan and Parikaram

மேஷம்: குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்து வக்ரமடைகிறார். கூடவே ராகு பயணம் செய்கிறார். வக்ர குரு உங்களுக்கு வெற்றியை தரப்போகிறார். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குரு பகவான் புதிய முயற்சிகளுக்கு வெற்றியை தேடித்தருவார். பலம் அதிகரிக்கும். பலம் கூடும். செய்யும் வேலைகள் விரைவடையும். ஏதோ விசயத்திற்காக காத்திருக்கிறீர்கள். நினைத்தது நிறைவேறும். வருவது வரட்டும் என்று முயற்சி செய்வீர்கள்.

வேலையில் புரமோசன்: ராகு உடன் இணைந்திருக்கும் ஜென்ம குரு வக்ரமடையும் காலத்தில் உங்களுக்கு இடமாற்றத்தை தருவார். வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும். குருவின் செயல்பாடுகள் மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜென்ம ராகு அவ்வப்போது தனது செயலை காட்டுவார். மன அமைதிக்காக தியானம் செய்வது நல்லது.

Guru peyarchi palan 2023: Guru Vakra Peyarchi Palan Mesham rasi Palan and Parikaram

வெற்றிகள் தேடி வரும்: குருபகவான் செப்டம்பர் மாதம் வக்ரமடைவார். ராகு பகவான் அக்டோபர் மாத இறுதியில் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலைக்காக புதிய முயற்சி செய்வீர்கள். குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். சனிபகவான் லாபத்தில் இருக்கிறார். தடைகளை தாண்டி வெற்றிகள் கிடைக்கும். குருவின் பார்வையால் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கைகூடி வரும் பாக்கியங்கள் தேடி வரும்.

பண வருமானம் தேடி வரும்: பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு கல்யாணம் கை கூடி வரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், வேலை செய்பவர்களுக்கு பளு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபாரம் தொழிலில் ஏற்பட்டு வந்த தடைகளும் தாமதங்களும் குரு பார்வையால் சரியாகி விடும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு யோக காலம் தொடங்கப்போகிறது மேஷ ராசிக்காரர்களே.. அனுபவிக்கத் தயாராகுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+