குரு பெயர்ச்சி பலன் 2023: பரணிக்கு மாறும் குரு பகவான்..சுக்கிரன் அருளால் குபேர யோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். இன்னும் சில வாரங்களில் குரு பகவான் சுக்கிரபகவானின் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் ஜூன் மாதம் 06ஆம் தேதி முதல் நவம்பர் 22 வரை பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். இந்த நட்சத்திர மாற்றத்தினால் மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Guru Peyarchi palan 2023: Jupiter Transit Bharani Star Effects and remedies for 12 zodiac signs

மேஷம்: ஜென்ம குருவின் பயணத்தால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எதையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களது உழைப்புக்கு ஏற்ற உயர்வுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி குதூகலம் உண்டாகும். அடுத்தவர்கள் விசயத்தில் தலையிட வேண்டாம். குடும்ப ரகசியம் எதையும் பொதுவெளியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

Guru Peyarchi palan 2023: Jupiter Transit Bharani Star Effects and remedies for 12 zodiac signs

ரிஷபம்: குரு பகவான் விரைய ஸ்தானத்தில் உங்கள் ராசி அதிபதி சுக்கிரனின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காரணத்தில் பண வருமானம் அதிகரிக்கும். சுகமான நாட்களாக மாறப்போகிறது. அம்மாவின் வழி உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். முன்னேற்றகரமான நாட்களாக அமையப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வரும் பணத்தை சுப செலவாக மாற்றுங்கள்.

மிதுனம்: புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பரணி நட்சத்திர பயணம் உங்களுக்கு சுக்கிர யோகத்தை தரப்போகிறது. தொட்டது அனைத்தும் துலங்கப்போகிறது. உங்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எவ்வளவுதான் தெரிந்தவர்களாக இருந்தாலும் உங்களுடைய தங்க நகை, விலை உயர்ந்த பொருட்களை இரவலாக கொடுக்காதீர்கள். சிக்கலாகிவிடும். கால்களில் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை.

Guru Peyarchi palan 2023: Jupiter Transit Bharani Star Effects and remedies for 12 zodiac signs

கடகம்: தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறார். வேலையில் திடீர் மாற்றம் உண்டாகும். மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குரு பகவான் பரணியில் பயணம் செய்வதால் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்து விற்பனையில் கவனம் தேவை. உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசிக்கு அற்புதமான பலன்களை அள்ளித்தரப்போகிறார். உங்களுக்கு குபேர யோகம் கைகூடி வரப்போகிறது. வேலை தொழிலில் வளர்ச்சியும் திடீர் மாற்றங்களும் உண்டாகும். செய்யும் தொழிலில் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாதீர்கள். நரம்பு பிரச்சினை அவ்வப்போது வந்து போகும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Guru Peyarchi palan 2023: Jupiter Transit Bharani Star Effects and remedies for 12 zodiac signs

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் குருபகவான் விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறார். ஆயுளுக்கு ஏற்பட்டிருந்த கண்டங்கள் நுங்கும். சுப காரிய தடைகள் நீங்கும். திருமணம் நடைபெறும் காலம் கைகூடி வந்துள்ளது. வைகாசி மாதத்தில் பந்தல் போடும் நேரம் வந்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+