குரு பெயர்ச்சி பலன் 2023: கோடி கோடியாக பணம்..தேடி வரும் புகழ்..அசத்தப்போகும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் நவ கிரகங்களில் சுப கிரகம். இப்போது மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். வேலை, தொழில், திருமண வாழ்க்கை, குழந்தை பாக்கியத்திற்கு காரகர் இப்போது பாம்பு கிரகத்தோடு இணைந்துள்ளதால் பலன் பாதிக்குமோ என்ற பயம் பலருக்கும் உள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மீனம் ராசிக்கு 2வது வீட்டிற்கு உங்கள் ராசி அதிபதி குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானின் 5ஆம் பார்வை ஆறாம் வீட்டின் மீது விழுகிறது. 7ஆம் பார்வை அஷ்டம ஸ்தானம், 9 ஆம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. மீன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் செல்வம்,செல்வாக்கு சமூக அந்தஸ்து அதிகரிக்கப்போகிறது.

Guru Peyarchi palan 2023: Jupiter Transit Effects and remedies for Meenam Rasi

குரு பகவான் உங்களுக்கு ராசி நாதன். ஏற்கனவே ஏழரை சனி ஆரம்பமாகி விட்டது. ராகு உடன் குரு இணைந்துள்ளார். உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம். நிறைய பண வருமானம் வந்தாலும் அதிக பேராசையால் சில வீண் செலவுகள் வந்து போகும். புகழும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குடும்பத்தில் மன அமைதி ஏற்படும். நிறைய பண வருமானம் வந்தாலும் விரைய சனியால் செலவு கூடவே வந்து போகும்.

குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறு, எட்டு,10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. கடன் வாங்கி சொத்து வாங்குவீர்கள். பழைய கடன்கள் அடைபடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் நேரம் வந்து விட்டது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களுக்கு மருத்துவ செலவுகளை கொடுத்து வந்த நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. மன தைரியத்தோடு உங்கள் வேலைகளை பார்க்க தயாராவீர்கள்.

தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிட்டாலும் ராகு உடன் இருப்பதால் பொறுமையாக இருப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கவோ, வேலை மாற்றம் செய்யவோ ஏற்ற காலம். வரும் ராகு கேது பெயர்ச்சி வரைக்கும் காத்திருப்பது நல்லது. திருமணம் சுபகாரியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அதிக அளவில் கொடுக்காது. அதே நேரத்தில் உங்களின் சுய ஜாதகத்தில் தசாபுத்தியின் செயல்பாடுகளைப் பொருத்து திருமணம் பேசி முடிக்கலாம். வாழ்க்கையில் புதிய முடிவுகளை எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+