குரு பெயர்ச்சி பலன் 2023: சித்திரைக்குப் பின் சிலரது வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் வரும்
குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிசய மாற்றங்கள் நிகழப்போகிறது.
சென்னை: குரு பகவானின் பார்வை கிடைத்தாலே போதும் கோடி நன்மைகள் ஏற்படும் என்பது பலரது வாழ்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை. குருபகவான் இப்போது மீன ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். ஏப்ரல் மாதம் இறுதியில் மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்திற்கு இடமாற்றம் அடையப்போகிறார். குரு பகவானின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிசய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. குரு பெயர்ச்சியால் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் பொன்னவன். திருமணம், குழந்தைப்பேறு, நல்ல வேலை கிடைப்பது குருபகவானின் அருளினால்தான். குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். குரு பலன் வந்து விட்டாலே அதிர்ஷ்டம் தேடி வரும் வாழ்க்கையில் வசந்தம் வீசும். நிறைய பண வரவு வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எனவேதான் குரு பெயர்ச்சியை பலரும் எதிர்பார்க்கின்றனர். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு யாருடைய வாழ்க்கையில் அதிசய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே..உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பண பற்றக்குறை நீங்கும் திடீர் பண வருமானம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். புதிய பொறுப்புகள் வரும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. 12 ஆண்டுகளுக்குப்பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு வருவதால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.
ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த பண வரவு வந்தாலும் நிறைய செலவுகள் வரும் சிக்கனம் தேவை. சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.
மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே.. குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு சாதகமான இடங்களை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே உங்களுக்கு பத்தில் குரு பதவி பறிபோகும் என்று பயப்பட வேண்டாம். வேலையில் சுமை கூடும். எந்த நேரத்திலும் விழிப்புணர்வோடு இருங்கள். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். திடீர் பண வரவு வரும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.
சிம்மம்
பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குடும்பத்தில் உற்சாகம் கூடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை நீங்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே அஷ்டம ஸ்தானத்தில் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் சோர்வுகள் வந்து நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உயர்கல்வி பயில வெளியூர் பயணம் செல்வீர்கள். பண வரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளும் கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே..உங்களுக்கு குரு பகவானின் பயணமும் பார்வையும் சாதகமாக உள்ளது. பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் கண்டிப்பை எதிர்கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பின் உங்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே.. குரு பகவான் ஆறாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் நீங்கள் புதிய வீடு வாகனம் வாங்கலாம். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப்பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே..குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத திருப்புமுனைகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் வரும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். பழைய கடன் பிரச்சினை நீங்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளுக்கும் உங்களுக்கும் ஏற்பட்டநெருக்கடிகள் நீங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே..வேலையில் புரமோசனும் பண வருமானமும் அதிகரிக்கும். கடனாக வாங்கிய பணத்தை செட்டில் செய்வீர்கள். உடன் வேலை செய்பவர்கள், உயரதிகாரிகளிடம் வாக்குவாதம் தவிர்க்கவும். வீட்டிலோ, வெளியிடங்களிலோ அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும்.
கும்பம்
குரு பகவான் மூன்றாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல பண வருமானம் கூடும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் நோய்கள் வந்து நீங்கும்.
மீனம்
குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களின் சொல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications