குரு பெயர்ச்சி பலன் 2023: கோடீஸ்வர யோகம்..குருபகவானால் சித்திரை முதல் குபேரனாகும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் இப்போது மீன ராசியில் அமர்ந்துள்ளார். ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அளவிட முடியாத அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. சிலருக்கு சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். குருவின் சஞ்சாரம் சரியில்லாமல் இருந்தாலும் குருவின் பார்வையால் கோடீஸ்வர யோகம் சிலருக்கு தேடி வரும். குரு பார்க்க கோடி நன்மையை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

குரு பகவான் கோச்சாரப்படி 2,5,7,9,11ல் சஞ்சரித்தால் நன்மையை செய்யும் என்று சொல்வார்கள். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த இடத்தில் குரு அமர்கிறார் எந்தெந்த இடங்களில் பார்வையிடப்போகிறார் அதன் மூலம் என்னமாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே.. குரு பகவான் ஜென்ம ராசியில் பயணம் செய்யப்போகிறார். சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வரும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 'ஜென்ம குரு வனத்தினிலே' என்று சொல்வார்கள். பெரிய அளவில் முதலீடுகள் செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். ஒவ்வொரு செயலிலும் முன்யோசனை அவசியம். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. திருமண சுபகாரியம் தொடர்பாக பேசலாம், குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கி வர ஜென்ம குருவினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. வீடு சொத்து சேர்க்கை ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் நலமடையும், நோய்கள் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷங்கள் நீங்கும்.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

மிதுனம்

குருபகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் பயணம் செய்வதால் தொழில் ரீதியான லாபம் பெருகும். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும். வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. திருமணம் சுபகாரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தை பாக்கியம் கைகூடும் பிள்ளைகளுக்கு திருமண சுபகாரியங்கள் நடைபெறும்.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

கடகம்

கடக ராசிக்காரர்களே..குருபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். வேலையில் கவனமும் நிதானமும் அவசியம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வீடு நிலம் வாங்கும் யோகம் தேடி வரும். நோய்கள் நீங்கும், கடன் பிரச்சினையும் முடிவுக்கு வரும்.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே.. குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. அச்சமும் மனக்குழப்பமும் நீங்கி ஆனந்தம் அதிகரிக்கப்போகிறது. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும்.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

கன்னி

கன்னி ராசிக்காரர்களே.. உங்களுடைய ராசிக்கு 8ஆம் வீட்டில் குரு பயணம் செய்யப்போகிறார். தொழில் வேலை விசயங்களில். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவதால் சுப விரையங்கள் ஏற்படும். நல்ல தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். வேலையில் இருந்த பிச்சினைகள் நீங்கும் மன உளைச்சல் நீங்கி மன அமைதி அதிகரிக்கும்.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

துலாம்

துலாம் ராசிக்காரர்களே..குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். குருபகவானின் நேரடிப் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும், வேலையில் புரமோசனும் கிடைக்கும். குரு பார்வை நேரடியாக விழுவதால் கோடி கோடியாக பலன்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே..குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இது ருண ரோக சத்ரு ஸ்தானமாகும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். சிகிச்சை மூலம் எளிதில் குணமடையும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். எனவே யாருக்கும் இந்த கால கட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

தனுசு

தனுசு ராசிக்காரர்களே..பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்வதால் புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். சில பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. இதுவரை இருந்த மன அழுத்தங்கள் நீங்கும். பதவியில் மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். குருவின் பார்வை லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீது விழுகிறது. ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

மகரம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் பயணம் செய்யப்போவதால் வீடு வாங்கலாம். புது வீடு கட்டி குடியேறலாம். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், தொழில் ஸ்தானம், எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தின் மீது விழுகிறது. நோய்களும் மரணத்திற்கு ஒப்பான கண்டங்களும் நீங்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அதிகாரப்பதவி தேடி வரும். புரமோசனும், சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும். குருவின் பார்வையால் ஏழரை சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரப்போகிறது.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

கும்பம்

உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் பயணித்த குருபகவான் மூன்றாவது வீடான தைரியம், முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். இளைய சகோதரர்கள் வகையில் சில சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிறிய ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பலன் வந்து விட்டது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுவதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலை தொழிலில் லாபம் கிடைக்கும். பெரிய அளவில் முதலீடு செய்வதை விட சிறிய அளவில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal

மீனம்

உங்கள் ஜென்ம ராசியில் இருந்த குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சிக்கல்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும். நல்ல தன வரவு வரும். சேமிப்பும் உயரும். திருமண சுபகாரிய முயற்சிகள் கை கூடி வரும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்கள் ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவதால் புதிய வேலை கிடைக்கும். நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நோய்கள் நீங்கும் பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் நீங்கும் காலம் வந்து விட்டது.

Guru peyarchi palan 2023 Tamil: Guru peyarchi Gubera yogam perum 5 rasigal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+