குரு பெயர்ச்சி பலன் 2023: பரணியில் குருவின் பயணம்..பண மழையில் நனையும் 4 ராசிக்காரர்கள்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். இதுநாள் வரைக்கும் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்து வந்த குரு பகவான் ஜூன் இறுதியில் தொடங்கி நவம்பர் இறுதி வரைக்கும் சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். குருவின் நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் தரப்போகிறது. சில ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன சிக்கல்களும் வரப்போகிறது. பரணி செல்லும் குருவினால் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

துலாம்: உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். குரு பகவான் உங்கள் ராசிநாதன் நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போவதால் உங்களுக்கு திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். தொட்டது துலங்கும் காரிய வெற்றிகள் உண்டாகும். நோய்கள் நீங்கும் மனதில் ஏற்பட்ட காயங்கள் ஆறும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆன்மீக பயணம் சென்று ஆலய தரிசனம் செய்வீர்கள். குரு பகவான் வக்ரகதியில் செல்லும் செப்டம்பர் மாதத்தில் நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் சீராகும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். எதிரிகள் தொல்லைகள் அகலும்.
விருச்சிகம்: உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் விரைய ஸ்தான அதிபதி, களத்திர ஸ்தான அதிபதியுமான சுக்கிரன் நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் இந்த கால கட்டத்தில் பண மழையில் நனைவீர்கள். பெண்களுக்கு பொன்னான காலம் பொன்நகைகள் சேரும் காலம் வந்து விட்டது. கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். பரிசுப்பொருட்களால் உங்கள் துணை உங்களை திக்குமுக்காட வைப்பார். வீடு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். திருமண சுப காரியம் கைகூடி வரும்.
தனுசு: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் நட்சத்திரம் மாறப்போகிறார். சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பயணம் மாறினாலும் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. புது வீடு மாறுவீர்கள். நினைத்தது நிறைவேறும் சவால்களை எளிதில் வென்று சாதித்து காட்டுவீர்கள். குரு பகவான் வக்ரகதியில் பயணம் செய்யும் காலத்தில் சின்னச்சின்ன சண்டைகள் வந்து போகும். பணம் விசயங்களில் கவனம் தேவை. புதியவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

மகரம்: குருபகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். செயல்களில் நிதானம் தேவை. நவம்பர் வரைக்குமே உங்களுக்கு பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது. திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் வந்து பாக்கெட்டில் பணத்தை நிரப்பும். புது வீடு மாற்றம் உண்டாகும். வசதியான வீட்டிற்கு குடி செல்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கைகூடி வரும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். குரு பகவான் வக்ரகதியில் செல்லும் காலத்தில் மின்னணு சாதனங்களை கவனமாக கையாளுங்கள். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதீத அக்கறை காட்டுவது அவசியம். சகோதரர்கள், சொந்த பந்தங்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.
கும்பம்: குரு பகவான் உங்களுக்கு யோகத்தை தரக்கூடியவர். முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் பயணம் செய்தாலும் பரணி நட்சத்திரத்திற்கு இடம் மாறியதால் உங்களுக்கு பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். கொடுத்து ஏமாந்து போய் வரவே வராது என்று நினைத்த பணம் கூட கைக்கு வரும். பெற்றோர்களின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புது வீட்டிற்கு மாறுவீர்கள். பெண்கள் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். எந்த சூழ்நிலையிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். பணத்தை பெரிய அளவில் முதலீடு செய்யாதீர்கள். பங்குச்சந்தையில் பணத்தை போடும் முன் யோசிப்பது நல்லது. பேச்சில் கனிவு தேவை. கோபப்பட்டு வார்த்தைகளை கொட்டி விட வேண்டாம்.

மீனம்: உங்கள் ராசி நாதன் குரு பகவான் இடமாற்றமடைகிறார். சுக்கிரன் நட்சத்திரமான பரணியில் பயணம் செய்யும் குரு பகவான் உங்களுக்கு புகழையும் செல்வாக்கையும் தேடி தரப்போகிறார். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் நீங்கும். இளைய சகோதரர்களின் உதவிகள் தேடி வரும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். குரு பகவான் வக்ரநிலையில் பயணம் செய்யும் காலத்தில் செப்டம்பர் முதல் உங்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. சரியான நேரத்தில் செய்யும் முதலீடு நல்ல லாபத்தை பெற்றுக்கொடுக்கும்.












Click it and Unblock the Notifications