குரு பெயர்ச்சி பலன் 2023: வைகாசியில் கெட்டி மேளம்..இந்த ராசிக்காரர்கள் வீட்டில் குவா குவா கேட்கும்!
சென்னை: குரு பகவான் தனது ஆட்சி வீடான மீனம் ராசியில் சஞ்சரித்த குருபகவான் செவ்வாய் பகவானின் வீடான இன்னும் சில நாட்களில் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். குரு பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு வேலையில் புரமோசனும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதோடு வீடு, மனை, வண்டி வாங்கும் யோகத்தையும் ஏற்படுத்தும். மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியில் ஜென்ம குருவாக அமர்ந்தாலும் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வும், வேலை செய்யும் இடத்தில் இடம் மாற்றமும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். இந்த குரு பெயர்ச்சியால் குருபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு கட்டுவது, வண்டி வாகன சேர்க்கை நடைபெறும். பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செய்யவும். குரு பகவான் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தரப்போகிறார். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். புதிய தொழில் தொடங்கலாம். அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள்.

ரிஷபம்
இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதி, செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சம்பள உயர்வும் கிடைக்கும். நீண்ட நாட்கள் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திடீர் செலவுகள் வரும். வருமானம் அதிகரிக்கும். திருமணத்தடைகள் நீங்கும். புது வீடு கட்டுவீர்கள். கடன்கள் அடைபடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளியூர் வெளிநாடு செல்வார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையில் நடைபெறும்.

மிதுனம்
குரு பெயர்ச்சியால் பண வரவு அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதிகம் நன்மைகள் நடைபெறும். மூத்த, இளைய சகோரதரர்கள், சகோதரிகள் உதவி செய்வார்கள். உடல்நிலை பாதிக்கப்படும் மருத்துவ செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சி உற்சாகத்தை தரப்போகிறது. இதுநாள் வரை இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வும், பணியிட மாற்றமும் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமையும். குடும்பத்துடன் வெளியூருக்கு உல்லாச பயணம் செல்வீர்கள். உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். இதுநாள் வரை இருந்த கஷ்டங்கள் நீங்கும். குரு பெயர்ச்சியால் வெளிநாடு சென்று பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் செய்வதற்கு இருந்த தடைகள் நீங்கும். பெண்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நன்மைகளைத் தரப்போகிறது. திருமண யோகம் கை கூடி வந்து விட்டது. செல்வமும், செல்வாக்கும் தேடி வருகிறது. புது வீடு கட்டலாம். வீடு கட்ட மனை வாங்கலாம். வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்த சச்சரவுகள் முடிவுக்கு வரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குரு பெயர்ச்சியால் திருமணத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணம் செய்தவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் தேடி வரும்.

கன்னி
குரு பகவான் உங்களுக்கு நல்ல செய்திகளை தரப்போகிறார். குடும்பத்தில் உறவினர்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். குருவின் துணையால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குரு பெயர்ச்சி மன நிம்மதியை தரப்போகிறது. செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். புகழும், பெருமையும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப வரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பணம் வரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் தேடி வரும்.













Click it and Unblock the Notifications