Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023: மேஷத்திற்கு ஜென்ம குரு..அடி தூள் ஜாக்பாட்..உணவு விசயத்தில் உஷாரா இருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷ ராசியில் ராகு உடன் குரு அமர்வதால் அஞ்ச வேண்டாம் மேஷ ராசிக்காரர்கள் நினைத்ததை முடிக்கப்போகிறீர்கள். சொந்த பந்தங்கள் கூடி குடும்பத்தோடு சுப நிகழ்ச்சிகளை நடத்தப்போகிறீர்கள். 22 ஆம் தேதி குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். 2024ஆம் ஆண்டு மே மாதம் வரை குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஜென்ம குரு என்ன செய்வார் என்று பார்க்கலாம்.

செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வும், வேலை செய்யும் இடத்தில் இடம் மாற்றமும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். இந்த குரு பெயர்ச்சியால் குருபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு கட்டுவது, வண்டி வாகன சேர்க்கை நடைபெறும். பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செய்யவும். குரு பகவான் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தரப்போகிறார். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். புதிய தொழில் தொடங்கலாம். அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள்.

Guru Peyarchi palan 2023 Tamil : Jenma Guru Mesham Rasi guru Peyarchi Palan

குரு பகவான் ராகு உடன் இணைந்து ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் நெருப்பு வீட்டில் இணைந்துள்ளதால் ராகுவின் வேகம் அதிகரிக்கும். தேவையற்ற குழப்பங்களை தவிருங்கள். காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதிகார பதவியில் இருப்பவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். எதையும் தெளிவாக யோசித்து முடிவு எடுப்பது நல்லது.

ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு நன்மைகள் அதிகாரிக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்களின் நலம் விரும்பிகளிடம் கேட்டு செயல்படுவது நல்லது. தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் பயணம் செய்பவர்கள் பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள்.

குரு பகவான் உங்களுடைய ராசிக்கு பாக்யாதிபதி, விரைய ஸ்தான அதிபதி மோட்ச காரக அதிபதி. குரு பகவான் ஜென்ம ராசிக்கு வந்து 5,7,9ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். சுப காரியங்கள் எல்லாமே சுபமாக முடியப்போகிறது. புது முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். குரு பார்வை 5ஆம் பார்வை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுவதால் பலமாக இருப்பதால் பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும்.

Guru Peyarchi palan 2023 Tamil : Jenma Guru Mesham Rasi guru Peyarchi Palan

வெளிநாடு செல்லும் யோகம் பிள்ளைகளுக்கு தேடி வரும். நல்ல கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். நல்ல உணவுகளை சாப்பிடுங்கள். குரு பகவானின் 7ஆம் இடத்து பார்வையால் திருமணம் கைகூடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கூட்டுத்தொழில் சிறப்படையும்.

குரு பகவானின் 9ஆம் வீட்டு பார்வையால் கவுரவ பதவிகள் தேடி வரும். அப்பாவின் மூலம் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். சித்தர்களின் ஆசி கிட்டும். வழக்குகளில் ஏற்பட்ட பின்னடைவு விலகும். நீண்ட நாட்களாக வெளிமாநில புண்ணியத் தலங்களுக்கு போக நினைத்தும் தடைபட்டுக் கொண்டிருந்ததே, இனி குடும்பத்துடல் சென்று வருவீர்கள். அதிடீர் பயணங்கள் அதிகரிப்பதால் கையிருப்பு கரையும்.

திடீரென்று புதிய கௌரவ பதவிகள் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அதே நேரத்தில் அவ்வப்போது தலைச்சுற்றல், ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக்குறைவு என வரக்கூடும். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. தண்ணீரை காய்ச்சி குடிக்கவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+