குரு பெயர்ச்சி பலன் 2023: வேலையில் புரமோசன்..சம்பள உயர்வு இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் ஏப்ரல் 22ம் தேதி சித்திரை மாதம் 9ஆம் நாள் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் தனது ஆட்சி வீடான மீனம் ராசியில் சஞ்சரித்த குருபகவான் செவ்வாய் பகவானின் வீடான இன்னும் சில நாட்களில் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். குரு பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு வேலையில் புரமோசனும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதோடு வீடு, மனை, வண்டி வாங்கும் யோகத்தையும் ஏற்படுத்தும். துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம்,மீனம் ஆகிய 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என பலன்களைப் பார்க்கலாம். திருமணம் சுப காரிய யோகங்கள் யாருக்கு கைகூடி வரப்போகிறது? வேலையில் புரமோசன் யாருக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Guru peyarchi palan 2023 tamil: Jupiter transit Meenam to Mesham Who will get good job and Promotion

துலாம்: குரு பெயர்ச்சி அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. சுப காரியம் நடைபெறுவதற்கு இருந்த தடைகள் நீங்கும், குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். நிதி வசதிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். குரு பெயர்ச்சியால் கடன்கள் தீரும். குரு பார்வை உங்களுக்கு கிடைப்பதால் தன தான்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வையால் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். குரு பெயர்ச்சியால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், உற்சாகமும் அதிகரிக்கும். முன்னோர்கள் சொத்துக்களில் இருந்து பங்கு, பாகங்கள் கிடைக்கும். வழக்குகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் ஆலோசனையை தவறாமல் கேளுங்கள். காதல் விசயங்களில் கவனம் தேவை. எதையும் வெளிப்படையாக கூடி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுப செய்திகள் தேடி வரும். குருபகவான் அருளினால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களே.. அற்புதங்கள் நிகழப்போகிறது. சுப காரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் அகலும் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். வண்டி, வாகனம் வாங்கலாம். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி அதிகரிக்கும்.கடன் பிரச்சினைகள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும். நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். சுப காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும். உடலில் இருந்த நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில்கள் தொடங்க முயற்சி செய்யலாம்.

மகரம்: குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது. செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். வருமானம் கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் பொன்னான தருணம் இது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வழக்குகள் சாதகமாக முடியும். கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். கடனாக கொடுத்த பணம் மீண்டும் கைக்கு வரும்.

கும்பம் : குரு பெயர்ச்சியினால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சுப காரியங்களில் வெற்றி கிடைக்கும். திருமண தடை நீக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியம் வெற்றி பெறும் வரை தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டை சச்சரவில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் உற்சாகமாக பேசுங்கள். இடம் பொருள் அறிந்து பேசினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணம் விசயத்தில் கவனமாக இருக்கவும். தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க அதிக முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும்.

மீனம்: குரு பெயர்ச்சியினால் பணப்பிரச்சினைகள் தீரம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்திருக்க நேரிடலாம். உங்கள் வாழ்க்கையில் வாழ்வில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். புதிய வீடு, கட்டிடங்களை கட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். பெற்றோரின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும். குரு பெயர்ச்சி உங்களுக்கு நிறைய பண வருமானத்தை தரப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுப விரைய செலவுகளை ஏற்படுத்தும். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். காரியத்தடைகள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் நிலவும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். துன்பங்களும், துயரங்களும் நீங்கும் காலம் வந்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+