Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023: பொன் நகை வாங்கும் யோகத்தை அள்ளித்தரப்போகும் குரு பகவான்..யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் வரும் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். பொன்னவன் குருவின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு பொன்னான யோகம் தேடி வரப்போகிறது. 'குருபார்க்க கோடி நன்மை' என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரத் தொடங்கும். பெண்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி உள்ளது என்று பார்க்கலாம்.

மேஷம்: செவ்வாய் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், இனி உங்கள் ராசியில் ஜென்ம குருவாக அமரப்போகிறார். உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. பெண்களுக்கு வீட்டிலும் வேலை செய்யும் இடங்களிலும் பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு கல்யாணம் கை கூடி வரும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சிவ ஆலயங்களில் நவகிரக குரு பகவானை திங்கட்கிழமை சென்று வணங்கி வரலாம்.

Guru peyarchi palan 2023 Tamil : Jupiter transits From Meenam to Mesham rasi who will get sudden luck

ரிஷபம்: நேர்மையான எண்ணம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். உங்களுக்கு பண வரவுக்கு பஞ்சமிருக்காது. அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். பெண்களுக்கு நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். வீடு,வாகனம் வாங்கலாம். கடன் சுமை குறையும். எதிர்பாராத வகையில் பணம் வந்து பாக்கெட்டை நிரப்பும்.

மிதுனம்: நினைத்ததை நிறைவேற்றும் மிதுன ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் குருபவான் ராகு உடன் சஞ்சரிக்க உள்ளார். 11ஆம் வீட்டில் குரு வரும் போது முழுமையான யோகத்தை கொடுப்பார். லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். உங்களுடைய ராசிக்கு 3வது வீட்டில் குரு பகவான் 5ம் பார்வையாக பார்க்கிறார். 5ஆம் வீட்டையும் 7ஆம் வீட்டையும் குருபகவான் பார்வையிடுகிறார். குருபகவான் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். திருமணமாகும் வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். மேலும் நன்மைகள் நடைபெற கல்லாலமரத்தடியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கடகம்: சந்திர பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் 10 ஆம் இடத்திற்கு செல்கிறார். பத்தாமிடத்து குரு ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டது என்பது பாடல். தொழில் குருவினால் நன்மையே நடக்கும். குரு பகவான் 5ம் பார்வையாக 2ம் இடமான வாக்கு வித்தை குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம். பெண்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவு செய்யுங்கள். 4ம் இடத்தை குரு பகவான் பார்வையிடுவதால் வீடு,மனை வாங்கலாம். 6ஆம் வீட்டினை பார்வையிடுவதால் நோய் நொடிகள் தீரும், கடன் பிரச்சினைகள் தீரும். வியாழக்கிழமை விரதம் இருந்து குருபகவானை வணங்கலாம்.

Guru peyarchi palan 2023 Tamil : Jupiter transits From Meenam to Mesham rasi who will get sudden luck

சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே... அஷ்டமத்து குருவினால் கடந்த ஓராண்டு காலம் நிம்மதி இழந்து இருந்தீர்கள். இனி கவலை வேண்டாம். குரு உங்களின் பாக்கிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் வெளிநாடு செல்லும் யோகம் வரும். குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு 3ம் இடம், 5ஆம் இடத்தை குரு பார்வையிடுகிறார். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு அமோகமான குரு பெயர்ச்சி. கைகள் நிறைய பணம் வரும் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.

கன்னி: உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைந்து 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். அஷ்டமத்தில் குரு அவ்வளவாக நல்லதில்லை என்றாலும் குருவின் பார்வையினால் அதிகம் நன்மைகள் நடக்கும். ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானம், 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடங்களின் மீது விழுவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். இல்லத்தரசிகளே பணவரவு அதிகரிக்கும். நகைகள் வாங்கும் நேரம் வந்து விட்டது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

துலாம்: அழகும் அன்பும் கொண்ட துலாம் ராசிக்காரர்களே... கடந்த ஓராண்டு காலமாக குருபகவான் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் சஞ்சரித்த காரணத்தால் சிரமங்களுக்கு ஆளாகி இருப்பீர்கள். இந்த வாரம் முதல் குருபகவான் ராசிக்கு 7வது வீட்டில் அமர்வது சிறப்பான அம்சம். குருவின் பார்வை, ராசியின் மீதும், லாப ஸ்தானத்தின் மீதும் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. பொருளாதார உயர்வு இருக்கும், தீராத பிணிகளும் தீரும் காலம் வந்து விட்டது. நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும்.

விருச்சிகம்: குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்திற்கு வருகிறார். ஆறாமிடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். குரு பகவான் 10ஆமிடமான தொழில் ஸ்தானம் 12 ஆம் இடமான விரைய ஸ்தானம், மற்றும் 2 ஆம் இடமான தன ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பணம் அதிகமாக வந்தாலும் கூட சுப விரைய செலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் தாமதப்படும். வியாழக்கிழமை மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் நடைபெறும்.

Guru peyarchi palan 2023 Tamil : Jupiter transits From Meenam to Mesham rasi who will get sudden luck

தனுசு: தன்னம்பிக்கை கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. 4ஆம் வீட்டில் இருந்த குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இது நன்மை தரும் அமைப்பாகும். குரு பகவான் தனது 9ஆம் பார்வையால் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 9ஆம் இடம், 11வது இடத்தையும் பார்வையிடுகிறார். குரு பகவான் பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவது சிறப்பு. உங்களுக்கு குரு பார்வை வந்து விட்டது. பொன்னவனின் பார்வையால் பெண்களுக்கு நகை, ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குரு பகவானால் மேலும் நன்மைகள் நடைபெற தென்திட்டை ராஜகுருவை வழிபடலாம்.

மகரம்: எடுத்த காரியத்தை மன தைரியத்தோடு முடிக்கும் மகர ராசிக்காரர்களே... உங்களுடைய ராசிக்கு 3வது வீட்டில் இருந்த குருபகவான் 4வது வீட்டில் அமரப்போகிறார். குருவின் பார்வை 8ஆம் இடம், 10ம் இடம், 12வது இடங்களின் மீது விழுகிறது. காதல், திருமண விசயங்களில் அவசரப்பட வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும். யாருக்கும் கடன் வாங்கவோ,யாருக்கும் கடன் கொடுக்கவோ வேண்டாம். பாடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருபகவானை வணங்க வாழ்க்கையில் வசந்தம் வீசும்.

கும்பம்: உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டிற்கு செல்லப்போகிறார். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு 11வது இடத்தை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரும் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மேலும் நன்மைகள் நடைபெற வாலாஜாபேட்டையில் எழுந்தருளியுள்ள மேதா தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்: ஜென்ம குருவாக இருந்து ஆதிக்கம் செலுத்தும் குருபகவான் இனி உங்கள் ராசிக்கு தன, வாக்கு ஸ்தானமாகிய இரண்டாவது வீட்டில் அமரப்போகிறார். குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6ஆம் வீடு, 8ஆம் வீடு 10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. பண வருமானம் அதிகரிக்கும் பெண்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்யும் வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும். கடந்த ஓராண்டு காலம் பட்ட துன்பங்கள் தீரப்போகிறது. மேலும் நன்மைகள் நடைபெற குருவித்துறை குருபகவானை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+