குரு பெயர்ச்சி பலன் 2023: இடமாற்றம்..கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் பணமழை யாருக்கு?
குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், வேலை மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சென்னை:
குரு பகவான் சுபிட்சத்தை தரக்கூடியவர். குரு பகவான் வரும் சித்திரை மாதம் 9ஆம் தேதி ஏப்ரல் 22ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் வாக்கியப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பயணிக்கும் குரு பகவான் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். மேஷம் என்பது செவ்வாய் பகவானின் வீடு. அங்கு ஏற்கனவே ராகு அமர்ந்திருக்க கூடவே குரு இணைவது பல ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை ஏற்படுத்தி தரப்போகிறது. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி என்ன யோகத்தை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவானின் பார்வை, 5,7,9ஆம் இடங்களின் மீது விழுகிறது. சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது குரு பகவானின் பார்வை படுகிறது. சுப காரியங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சனிபகவானின் பார்வை குரு ராகுவின் மீது விழப்போகிறது. இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு ஜென்ம ராசியில் குரு அமர்வதால் கண்டிப்பாக வேலை, தொழிலில் மாற்றம் ஏற்படும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். திருமண சுப காரியம் நடைபெறும். இடமாற்றம்,வீடு மாற்றம், வேலை மாற்றம் நிச்சயம் ஏற்படும்.
ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். மேஷ ராசிக்கு ஜென்ம குரு அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அப்பா வழி உறவுகளில் சொத்துக்கள் கிடைக்கும். இந்த ஆண்டு அதிக அளவில் ஆன்மீக பயணம் செய்வீர்கள்
5ஆம் வீட்டின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் புத்திரபாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். திருமண யோகம் கைகூடி வரும். உயர்கல்வி யோகம், நல்ல வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். நல்ல செய்திகள் தேடி வரும்.
திருமணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் 90 கிட்ஸ்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்போகிறது. நல்ல பார்ட்டனர் கிடைக்கப்போகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கவுரமான பதவிகள் தேடி வரப்போகிறது. 9ஆம் வீட்டில் குருவின் பார்வை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார். ராகுவும் குருவும் கூட்டணி சேர்ந்து நெருப்பு வீடான மேஷ ராசியில் இணைவதால் மனரீதியாக சில மாற்றங்கள் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் அவசரப்பட்டு முடிவு எடுத்து விடாதீர்கள். குழப்பங்களை தவிர்த்து நல்ல விதமாக யோசித்தால் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். உங்களுக்கு நல்ல அதிகாரம் மிக்க பதவி கிடைக்கப்போகிறது.
சொந்த தொழில் செய்யப்போகிறீர்கள். அற்புதமான வாய்ப்புகள் வரப்போகிறது மிகப்பெரிய உயர்வுகள் வரப்போகிறது. மன அழுத்தங்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். நிறைய வருமானம் வரப்போகிறது. கடன் பிரச்சினைகள் நீங்கும். கவுரவ பதவிகள் தேடி வரும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பிள்ளையார்பட்டி சென்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications