குரு பெயர்ச்சி பலன் 2022: குரு பார்க்க கோடி நன்மை..சொந்த வீடு வாங்கும் யோகம் யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் இப்போது மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். குரு பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அளவிட முடியாத அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. சிலருக்கு சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். குருவின் சஞ்சாரம் சரியில்லாமல் இருந்தாலும் குருவின் பார்வையால் பல நன்மைகள் கிடைக்கும். குருவின் பார்வையால் யாருக்கெல்லாம் சொந்த வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் சில மாதங்கள் அதிசாரமாகவும் சில மாதங்கள் வக்ரகதியிலும் செல்வார் குருபகவான். குரு பகவான் மனிதர்களின் கல்வி, வேலை, திருமணம், புத்திரபாக்கியம் போன்றவை நல்ல முறையில் கிடைக்க குருபகவானின் அருள் அவசியம். எனவேதான் நவகிரகங்களில் குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். குரு பகவான் கோச்சாரப்படி 2,5,7,9,11ல் சஞ்சரித்தால் நன்மையை செய்யும் என்று சொல்வார்கள்.

Guru peyarchi palan 2023 Tamil: Who will buy new house this Guru peyarchi Period

கடகம்: பத்தாம் இடத்தில் பயணம் செய்யும் குருவினால் வேலையில் மாற்றம் உண்டாகும். சிலருக்குப் புதிய பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். குருவின் பார்வை சாதகமாக உள்ளதால் வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். நவகிரக குருபகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்: சிம்மம் ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு அற்புதமான கால கட்டம். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். புது வீட்டிற்கு குடிபோகும் யோக காலம் வந்து விட்டது.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். குருபகவானின் நேரடி பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை, தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்யுங்கள் நல்ல வேலை கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளால் அலுவலகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப்பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டமும் நிறைய பண வருமானமும் கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு கட்டுவீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவீர்கள்.

தனுசு: குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். இந்த குரு பெயர்ச்சி ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் கை கூடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வாடகை வீட்டில் வசித்தவர்கள் இனி சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் கிடைக்கப்போகிறது. மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி அற்புதமான மாற்றங்களைத் தரப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+