குரு பெயர்ச்சி பலன் 2023 : கோடி கோடியாக அள்ளித்தரப்போகும் குரு பகவான்..யாருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசையும் கனவும் நிறைய பேருக்கு இருக்கும். கோடீஸ்வர யோகம் எல்லோருக்கும் கிடைத்து விடாது.குரு பெயர்ச்சி நிகழும் போது கோச்சார ரீதியாக ஏற்படும் மாற்றங்களினால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட்டு ஒருவருக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

பொன்னவன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.

Guru Peyarchi palan 2023 Tamil : Who will get Sudden luck and Fortune and Kodeeswara yogam

குரு பார்வை கிடைத்தால் கோடி நன்மைகள் வந்து சேரும் என்பார்கள். எனவேதான் திருமணம், குழந்தை பாக்கியம், வேலையில் உயர்வு, வருமானத்தில் உயர்வு, நோய் நொடியற்ற வாழ்க்கை வேண்டும் என்று விரும்புபவர்கள் குரு பெயர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். குருவின் பார்வை, சஞ்சாரம் அமைவதைப் பொருத்து ஒருவர் கோடீஸ்வர யோகம் பெறுகிறார்.

Guru Peyarchi palan 2023 Tamil : Who will get Sudden luck and Fortune and Kodeeswara yogam

மிதுனம்: குரு பகவான் முதலில் அள்ளித் தரப் போவது உங்களுக்குத்தான். இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் நிச்சயம் கோடீஸ்வரர்கள் ஆகப்போவது நிச்சயம். ஏற்கனவே அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ராகு உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இப்போது குரு பகவானும் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் வந்து அமர்வதால் உங்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். திடீர் ஆதாயங்களும், எதிர்பாராத பண வரவுகளும் கிடைக்கும். குடும்பத்திலும், அலுவலகத்திலும் நல்ல பெயர் கிட்டும். வேலை விஷயத்தில் நீங்கள் எடுத்த காரியம் எல்லாம் ஜெயிக்கும். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடு, ஐந்தாம் வீடு, மற்றும் களஸ்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. திருமண யோகம் கைகூடி வரும், வெற்றி மீது வெற்றி தேடி வரும், திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை கொடுத்து உங்களுடைய நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றித்தரப்போகிறார்.

சிம்மம்: உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு உங்களுக்கு சில அதிர்ஷ்டங்களையும் முன்னோர்களின் ஆசிகளையும் வழங்குவார். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். கூடவே மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்வையிடுகிறார். அதிர்ஷ்டமும் நன்மைகளும் தேடி வரப்போகிறது. வருமானம் கூடும். புதிய திருப்பம் ஏற்படும். குரு பார்வை பலம் இருந்தால்தான் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்க ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். இது வரை இருந்த பணக் கஷ்டம் நீங்கி உங்கள் பொருளாதார நிலை மேம்படும். தடைகள் தவிடு பொடியாகும்.எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சொந்த வீடு, வாகனம் என சகல யோகங்களையும் உங்களுக்கு குரு பகவான் அள்ளித் தரப் போகிறார்.

துலாம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆகவே உங்களுக்கு சகலமும் யோகமாக அமையப் போகிறது. குரு உங்கள் ராசியை தன்னுடைய ஏழாம் பார்வையால் நேரடியாக பார்க்கிறார். திடீர் மாற்றங்களை கொண்டு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.வேலை, தொழிலில் சிறப்படைவீர்கள். பணப் புழக்கம் நன்றாகவே இருக்கும். வருமானம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றி கிடைக்கும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். செய்யும் தொழிலில் லாபத்தை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். ஏழாம் வீட்டில் குருவும் ராகுவும் இணைந்திருப்பதால் குடும்பத்தில் கவனம் தேவை. காதல், திருமணம் தொழில் பார்ட்டனர்களிடம் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருப்பது அவசியம். பத்துக்கு பத்தாமிடம். தொழிலுக்கு தொழில் ஸ்தானம், வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வருடம் முழுவதும் வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும்.

Guru Peyarchi palan 2023 Tamil : Who will get Sudden luck and Fortune and Kodeeswara yogam

தனுசு: குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இந்த குரு பெயர்ச்சி புண்ணியங்கள் நிறைந்ததாக அமைகிறது. ஐந்தாம் வீட்டில் ராகு உடன் குரு இணைவது ராஜயோகம். குருவின் ஆதரவு அற்புதமாக இருக்கும். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மை செய்யும். தடைபட்டு வந்த அனைத்து காரியங்களும் மிக எளிதாக நடக்கப் போகின்றன. வேலை கிடைக்கும்.பதவி உயர்வு வரும் தொழிலில் லாபம் கிடைக்கும். புதிய வருமானம் வரும். குரு உங்க ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் மனதில் உள்ள எண்ணங்கள் ஆசைகள் நிறைவேறும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை இல்லையே என்று தவித்தவர்களுக்கு குரு இந்த முறை குழந்தை பாக்கியத்தை கொடுப்பார். வெளிநாடு யோகத்தை கொடுப்பார். வேலை உயர்ந்த பதவி உயர்வோடு கூடிய வருமானம் கூடும். இனிதான் உங்களுக்கு பரிபூரண ராஜயோகம் செயல்படப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+