Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023.. பொன்னவன் குருவின் பார்வை.. பெட்டி நிறைய தங்கம் யாருக்கு சேரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம், புத்திரபாக்கியம் கிடைக்க குரு பலன் வேண்டும். குரு பலன் வந்தாலே அந்த ராசிக்காரர்களின் சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக சிம்மம், ஏழாம் பார்வையாக துலாம், ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசிகளை பார்வையிடுகிறார். குரு பயணமும் பார்வையும் யாருக்கு ராஜயோகத்தை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான்: மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை வக்ரமடையப்போகிறார். குரு பகவான் வக்ரமடைந்தாலும் கொடுக்க வேண்டிய பலன்களை தவறாமல் கொடுப்பார். குரு பகவான் சுப கிரகம் என்பதால் வீடு, நிலம், சொத்து சேர்க்கையை தருவார். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சிலருக்கு பெட்டி பெட்டியாக செல்வம் சேரப்போகிறது. தங்க நகை வாங்கும் யோகமும் தேடி வரப்போகிறது.

Guru peyarchi palan 2023: These zodiac signs get Rajayogam for Guru Vakra Peyarchi

மிதுனம்: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் நிறைய முன்னேற்றங்களை தரப்போகிறார். உங்க ராசிநாதன் குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு செல்வதால் வருவதால் உங்களின் முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வை முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் விழுகிறது. நீங்கள் செய்யும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். திடீர் பயணங்கள் செல்வீர்கள். குரு பகவானின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீட்டில் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது. திருமணம் சுபகாரியம் நடைபெறும். அதேபோல திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொன்னவன் குரு பகவானின் பொன்னான பார்வையால் பெண்களுக்கு தங்கம் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது.

சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை நேராக உங்க ராசிக்கு கிடைக்கிறது. குருவினால் உங்களுக்கு இருந்த பண கஷ்டம் மனக்கஷ்டம் இருந்தது. வீண் பண விரையங்கள் இனி வராது. சுப செலவுகள் வரும். சொந்த வீடு நிலம் வாங்கலாம். தடைபட்ட காரியம் கை கொடுக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு மூன்று, ஐந்தாம் வீடுகளின் மீது விழுவதால் குரு பலனால் புத்திர பாக்கியம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது.

துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அதிக நன்மைகள் செய்ய மாட்டார் என்றாலும் பொன்னவன் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடி கோடியாக வருமானம் கிடைக்கப்போகிறது. பெண்களுக்கு பெட்டி நிறைய தங்கம் சேரப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கப்போகிறது. பண மழை பொழியப்போகிறது. இழந்த விசயங்களை நீங்கள் பெறும் காலம் வந்து விட்டது. நல்ல செய்திகள் தேடி வரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. உங்களுக்கு வியாபாரம் தொழிலில் நல்ல லாபம் வரும். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுவதால் உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்

தனுசு: குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நீங்கள் தொட்டது துலங்கும். நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. இது குரு பெயர்ச்சிஉங்களுக்கு விஷேசமான யோக பலன்களை தரப்போகிறது. பூர்வ புண்ணிய குரு உங்க ராசியை பார்வையிடுகிறார். உங்களுக்கு புத்திர யோகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. பொற்காலம் ஆரம்பமாகிவிட்டு. நேர்மறையான சம்பவங்கள் நடைபெறும். உங்க உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.

மீனம்: குரு பகவான் உங்க ராசிக்கு அதிபதி. குடும்ப குருவாக பயணம் செய்வதால் மீன ராசிக்காரர்கள் 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகிறீர்கள். உடல் நலத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. இரண்டில் குரு பகவான் பயணம் செய்வதால் உங்களுக்கு வர வேண்டிய பணம் வீடு தேடி கைக்கு வரும். ஏழரை சனியால் அல்லல் பட்டு வரும் உங்களுக்கு இனி தொந்தரவுகள் நீங்கி நன்மைகள் நடக்கும். குடும்ப குருவின் பார்வை உங்க ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் சந்தோஷங்கள் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். நோய் பாதிப்புகள் முடிவுக்கு வரும். எதிரிகள் தொல்லை நீங்கும். நீங்கள் பட்ட அவமானங்கள் முடிவுக்கு வரும். ஆயுள் கண்டம் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+