குரு பெயர்ச்சி பலன் 2023: குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம்..யாருடைய வீடு அமைதிப்பூங்காவாக மாறும்?
குரு பகவான் ஏப்ரல் மாதத்தில் மேஷம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 12 ராசிகளில் கோச்சாரப்படி எந்த வீட்டில் குரு அமர்ந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
மதுரை: நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன். ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் குரு பகவான் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் அமர்ந்து இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். இல்லாவிட்டால் வாழ்க்கையே போர்க்களமாகிவிடும்.
குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். தனுசு மீனம் ராசிகள் குருவிற்கு ஆட்சி வீடு. கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல. கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 9,11 ஆகிய பாவங்களில் பயணம் செய்யும் போது நற்பலனை வழங்குவார்.

குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலம் பெறும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஓராண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைவார் குருபகவான். தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார் குரு. பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் எந்த வீட்டில் குரு இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
ஜாதகத்தில் ஜென்ம குருவாக லக்னத்தில் அமர்ந்திருப்பார் குரு. பொதுவாகவே குரு ஜென்மத்தில் இருந்தால் சிறந்த பேச்சாளராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும் நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்கள், விவிஐபிக்களின் தொடர்பு கிடைக்கும். குரு நல்ல நிலையில் இருந்தால் இந்த பலன் கிடைக்கும்.
குரு பகவான் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து சுப கிரகத்தின் கூட்டணியோடு இருந்தால் பணவரவு அபரிமிதமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையாக சந்தோசமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ பலம் இழந்தோ இருந்தால் பணக்கஷ்டம் இருந்தாலோ குடும்பத்தில் ஒரே சண்டையாகத்தான் இருக்குமாம்.
மூன்றாம் வீட்டில் குரு பயணம் செய்தால் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிலும் தனித்துவமாக இருப்பீர்கள். அதே நேரம் மூன்றாம் வீட்டில் குரு தனித்து இருந்தாலோ இளைய சகோதர தோஷம் ஏற்படும்.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு இருந்தால் வசதி வாய்ப்பு கிடைக்கும். செல்வம், செல்வாக்கு அசையா சொத்து யோகம் நல்ல பழக்க வழக்கம் உயர்கல்வி யோகம் ஏற்படும்.
ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல் ஏற்படும். பரந்த மனப்பான்மை, பொதுக்காரிய ஈடுபாடு ஏற்படும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும், பெரியோர்களின் ஆசி கிடைக்கும். ஐந்தில் குரு தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். அதே நேரத்தில் சுப கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் சிறப்பான புத்திரபாக்கியம் அமையும்.
ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நோய்கள் நீங்கும் நீண்ட ஆரோக்கியம் அமையும், சிறப்பான குடும்ப வாழ்க்கை ஏற்படும். அதே நேரம் ஆறாம் வீட்டில் குரு பலம் இழந்து இருந்தால் வயிறு கோளாறு ஏற்படும்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஏழாம் வீடு களத்திர ஸ்தானம். ஜென்ம லக்னத்தில் இருந்து குரு ஏழாம் வீட்டில் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். அதே நேரம் குரு பகவான் ஏழாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபதி தோஷம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சினையும் திருமணமுறிவு ஏற்படும்.
எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் குரு இருந்தால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஏற்படும். திடீர் பணவரவு கிடைக்கும். வாழ்க்கை அமைதியாக இருக்கும். அதே நேரம் குரு தனித்தோ பாவிகள் சேர்க்கை பெற்றோ இருந்தாலே பலம் இழந்து இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும். வாழ்க்கையில் மன அழுத்தமும் உண்டாகும்.
குரு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வது நன்மை தரும் அமைப்பாகும். தாராளமான தன வரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு இருந்தால் உயர்பதவி யோகம் தேடி வரும். நேர்மையானவராக இருப்பீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். தனித்து இருந்தால் தடைகள் அதிகரிக்கும்.
லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு இருந்தால் தாராளமான தன வரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் மூலம் வசதி வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் புகழ் கவுரவம் கிடைக்கும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். 12ஆம் வீடு அயன ஸ்தயன ஸ்தானம். 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் குரு இருந்தால் வீண் செலவுகள் ஏற்படும். 12ஆம் வீட்டில் குரு அமர்ந்து சுபரான புதன், சுக்கிரன் பார்வை பெற்றால் நிம்மதியான இல்லற வாழ்க்கை அமையும். சுப செலவுகள் அமையும். கண் பார்வை பிரச்சினைகள் தீரும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications