குரு பெயர்ச்சி பலன் 2023: உங்களுக்கு குரு பலன் வந்திருச்சா?.. 90 கிட்ஸ் கெட்டி மேளச்சத்தம் கேட்குதா?
சென்னை: திருமணமும், குழந்தை பாக்கியமும் கிடைக்க குருவின் அருள் கண்டிப்பாக வேண்டும். குரு பலம் கூடி வந்தால் திருமண யோகமும், குழந்தை பாக்கிய வரமும் கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பார்வை: குரு பார்வை கோடி புண்ணியம் குரு அமரும் இடத்தை போல குரு பார்வை குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானத்தின் மீது விழும் போது திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இந்த குரு பெயர்ச்சியால் குடும்பம் உருவாகி இல்லற பந்தத்தில் இணையும் யோகம் நமக்கு இருக்கிறதா என்று ஆசையோடு பலரும் ராசி பலன்களை படித்து வருகின்றனர். எந்த ராசிக்காரர்களுக்கு குரு பலன் வந்துள்ளது என்று பார்க்கலாம்.

குரு பலம் யோகம்: குரு பெயர்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்தது. மேஷ ராசியில் ராகு உடன் குரு கூட்டணி சேர்ந்துள்ளார். செப்டம்பர் மாதம் மேஷ ராசியிலேயே குரு வக்ரமடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியின் மூலம் குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது.
குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிடுகிறார். குருபகவான் பொதுவாக ராசியில் அமரும் போதோ அல்லது 2,5,7,9,11 ஆகிய இடங்களில் அமரும் போதோ முதல்தர குரு பலம் வந்து விட்டதாக கூறலாம். அதே போல 3, 8, 10 ஆகிய இடங்களில் அமரும் போது இரண்டாம் தர குரு பலம் வந்து விட்டதாக சொல்லலாம்.
கெட்டி மேளம் கொட்டும்: இந்த முறை மீனம், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான குருபலம் காரணம் குடும்ப குரு, ஜென்மகுரு, லாப குரு, பாக்ய குரு, களத்திர குரு, பூர்வ புண்ணிய குரு என இந்த ராசிகளில் குரு சஞ்சரிக்கிறார். இதனால் சிங்கிள்ஸ் ஆக இருக்கிற இந்த ராசிக்காரங்க இனி குடும்பத்தோடு மிங்கிள்ஸ் ஆகப்போகிறீர்கள். அதேபோல புத்திர பாக்கியமும் தேடி வரப்போகிறது.
மேஷம் ஜென்ம குரு: மேஷம் ராசிக்கு ஜென்ம குருவாக அமர்வதோடு அவர் பார்வை ராசிக்கு ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களின் மீது விழுவதால் திருமணம் கைகூடி வரும் கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதே போல தனுசு ராசிக்கு குடும்ப குருவாக இருப்பதால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். தசாபுத்தி நன்றாக இருந்தால் திருமண யோகமும் கை கூடி வரும்.
மிதுனம்: குருபகவான் மிதுனம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து ராசிக்கு 3, 5, 7ஆம் இடங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டை களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும்.
தனுசு ராஜயோக காலம்: தனுசு ராசிக்கு குரு பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக உங்க ராசியை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியாலும் குரு பார்வையாலும் உங்களுக்கு இந்த முறை குரு பலன் வந்திருக்கிறது. திருமண யோகம் கை கூடி வருகிறது. அதே போல புத்திர பாக்கியமும் கிடைக்கப் போகிறது.
சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருவின் பார்வை உங்கள் ராசியின் மேல் விழுவதால் குருவின் பரிபூரண ஆசியோடு அற்புதமான ராஜ யோகம் கிடைக்கும். 5ஆம் பார்வையாக சிம்ம ராசியின் மீது குரு பார்வை விழுகிறது. மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
துலாம்: துலாம் ராசிக்கு குரு ஏழாம் இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியை குரு பார்ப்பதால் மனதிற்குப் பிடித்த மனைவி அமைவாள். சந்தான பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும்.












Click it and Unblock the Notifications