Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023: குரு தரும் யோகங்கள்.. தீபாவளியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிரடி சரவெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் சில கிரகங்கங்களுடன் சேரும் போது புதுவிதமான யோகத்தை தருவார். சந்திரன், செவ்வாய், சுக்கிரன் உடன் குரு கூட்டணி அமைத்தாலோ பார்த்தாலோ கோடீஸ்வர யோகம் தேடி வரும். தீபாவளி நாளில் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. 'குருபார்க்க கோடி நன்மை' என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நாடி வரப்போகிறது.

குரு மங்கள யோகம்: குருவும் செவ்வாயும் ஒன்றுகூடி 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது குருமங்கள யோகம் உண்டாகும். குரு பகவானும் செவ்வாய் பகவானும் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டாலும் குரு மங்கள யோகம் கிடைக்கும். இதன் மூலம் சிந்தனைத் திறன் அதிகரிக்கவும், சாதனைகள் பல புரியவும் இந்த யோகம் உதவும். குருவும் செவ்வாயும் ராஜ கிரகங்கள். ஆகவே, அமைச்சருக்கு இணையான பதவியும் பொறுப்பும் கிடைக்கும். தீபாவளி திருநாளில் மேஷம், துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு மங்கள யோகம் தேடி வந்துள்ளது.

Guru Peyarchi palan 2023: Who will get Guru Chandra Yogam and Guru Mangala Yogam

குருசந்திரயோகம்: குருவும் ,சந்திரனும் இணைந்து ஒரு ராசியில் இருந்தாலோ அல்லது பார்த்துக்கொண்டாலோ குருசந்திர யோகம் ஆகும். தற்போது மேஷ ராசியில் உள்ள குரு பகவான் துலாம் ராசியில் உள்ள சந்திரனை பார்வையிடுகிறார். குரு சந்திர யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கும், துலாம் ராசிக்காரர்களுக்கும் கிடைப்பதால் இந்த நாளில் பொன் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும்.

மேஷம்: செவ்வாய் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே... உங்கள் ராசியில் ஜென்ம குருவாக பயணம் செய்கிறார் குரு பகவான். உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். குரு மங்கள யோகமும், குரு சந்திர யோகமும் கைகூடி வந்துள்ளது. பேச்சில் தெளிவும், மனதில் அமைதியும் பிறக்கும். கோடீஸ்வர யோகத்தை பெறக்கூடிய நேரம் கைகூடி வந்துள்ளது. பார்க்கும் வேலையில் உயர் பொறுப்புகள் உங்களுக்கு நாடி வரப்போகிறது.

ரிஷபம்: குரு பகவான் 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். குரு பகவான் 4 ஆம் வீடு, 6 ஆம் வீடு மற்றும் 8 ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். உங்களுக்கு பண வரவுக்கு பஞ்சமிருக்காது. அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். கடன் சுமை குறையும்.நோய் நொடி நீங்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். தீபாவளி நாளில் இருந்து எதிர்பாராத வகையில் பணம் வந்து பாக்கெட்டை நிரப்பும்.

மிதுனம்: லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும்.உங்கள் ராசிக்கு 3ம் வீட்டினை குரு 5ம் பார்வையாக பார்க்கிறார். 5ஆம் வீட்டையும் 7ஆம் வீட்டையும் குருபகவான் பார்வையிடுகிறார். குருபகவான் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும்.

Guru Peyarchi palan 2023: Who will get Guru Chandra Yogam and Guru Mangala Yogam

கடகம்: பத்தாம் வீட்டில் குரு இருக்க செவ்வாய், சந்திரன் பார்வை கிடைப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு நன்மையே நடக்கும். குரு பகவான் 5ம் பார்வையாக 2மிடமான குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷங்கள் அதிகரிக்கும். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். வீடு,மனை வாங்கலாம். நோய் நொடிகள் தீரும், கடன் பிரச்சினைகள் தீரும்.

சிம்மம்: ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ள குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்கள் ராசிக்கு 3ஆமிடம், 5ஆம் இடத்தை குரு பார்வையிடுகிறார். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் உண்டாகும்.

கன்னி:அஷ்டம ஸ்தானத்தில் குரு பயணம் செய்வது அவ்வளவாக நல்லதில்லை என்றாலும் குருவின் பார்வையினால் அதிகம் நன்மைகள் நடைபெறும். ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானம், 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடங்களின் மீது விழுவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது. உணவு விசயத்தில் கவனமாக இருந்தால் வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

துலாம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்து குரு மங்கள யோகம், குரு சந்திர யோகத்தை கொடுக்கிறார். குருவின் பார்வை, ராசியின் மீதும், லாப ஸ்தானத்தின் மீதும் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. வராது என்று நினைத்த பணம் தேடி தேடி வரும். கோடி கோடியாக செல்வம் சேர்க்கப்போகிறீர்கள். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

விருச்சிகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் குரு பகவான் 10ஆமிடமான தொழில் ஸ்தானம் 12 ஆம் இடமான விரைய ஸ்தானம், மற்றும் 2 ஆம் இடமான தன ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பணம் அதிகமாக வந்தாலும் கூட சுப விரைய செலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும்.எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் வரும்.

தனுசு: குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு தனது 9ஆம் பார்வையால் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 9ஆம் இடம், 11வது இடத்தையும் பார்வையிடுகிறார். பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வையிடுவது சிறப்பு. குரு பார்வையால் பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். கோடி கோடியாக செல்வம் சேரும் யோக காலம் வந்து விட்டது.

Guru Peyarchi palan 2023: Who will get Guru Chandra Yogam and Guru Mangala Yogam

மகரம்: உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் குரு பகவான் பார்வை 8ஆம் இடம், 10ஆமிடம், 12வது இடங்களின் மீது விழுகிறது. பண வருமானம் வரும். யாருக்கும் கடன் வாங்கவோ,யாருக்கும் கடன் கொடுக்கவோ வேண்டாம். தீபாவளி நாளில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்: குரு பகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு 11வது இடத்தை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். தீபாவளி நாளில் திடீர் பண வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கும்.

மீனம்: குரு பகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார் குடும்ப ஸ்தான குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6ஆம் வீடு, 8ஆம் வீடு 10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. கடன் நோய் பிரச்சினைகள் தீரும் காலம் வந்து விட்டது. செய்யும் வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு தற்போது பார்க்கும் வேலையை விட நல்ல வேலைகள் கிடைக்கும். தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பது போல கவலைகள் வெடித்து சிதறப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+