குரு பெயர்ச்சி பலன் 2023: திடீர் புரமோசன்..இந்த 5 ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வு உறுதியாம்!
சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே நிறைய பேருக்கு வேலை போயுள்ளது. சம்பள குறைப்பு செய்துள்ளதால் மன அழுத்தம் கஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி ராகு உடன் பயணம் செய்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். இந்த குரு பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் வேலையும் புரமோசனும் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கோடி நன்மை தரப்போகும் குரு: குரு பகவான் மேஷ ராசியில் அமர்ந்து சிம்மம், துலாம்,தனுசு ராசிகளைப் பார்க்கின்றனர். இந்த ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கிறது. பண வருமானம் அதிகரிக்கக்கூடிய அளவிற்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமணம் கைகூடி வரும். சிலருக்கு புரமோசனும் கிடைக்கும். குரு பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும்.
கடகம்: பத்தாம் வீட்டில் குருபகவான் ராகு உடன் பயணம் செய்கிறார் நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் வேண்டாம். மறு பேச்சு பேசாமல் சொன்னதை செய்து விட்டு செல்லுங்கள் நல்லதே நடக்கும்.

கன்னி: குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். சுப விரைய செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். தாய் வழி உறவு தந்தை வழி உறவில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் நீங்கும். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. குருவருளும் திருவருளும் கிடைக்க வியாழக்கிமை குருபகவானை வணங்கவும் நன்மைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்: வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் தொடங்குவீர்கள். வீட்டில் சுப விரையங்கள் ஏற்படும். சுப காரியங்கள் கை கூடி வரும். குரு பெயர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை.
தனுசு: குரு பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

மகரம்: சுக ஸ்தான குருவின் பார்வை உங்க ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்: உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுவதால் திருமணம் அமைப்பு கை கூடி வருவதால் காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள் போங்கள் பிரச்சினைகள் எளிதில் நீங்கும். வெற்றிலை மாலை சாற்றி வீர ஆஞ்சநேயரை வழிபடுங்கள் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மீனம்: வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வேலையில் புரமோசனும் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். வார்த்தைகளில் கோபத்தை காட்டினால் அதுவே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும் வேலை செய்யும் இடத்தில் கவனமாக பேசவும். ஜூன் மாதம் முதல் உங்கள் ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.












Click it and Unblock the Notifications