குரு பெயர்ச்சி பலன்: மேஷ ராசியில் குரு வக்ரம்.. செப்டம்பர் முதல் குபேர யோகம் பெறும் ராசிக்காரர்கள்
மதுரை: மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் 04ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரைக்கும் வக்ர கதியில் பயணம் செய்வார். நான்கு மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருபகவான் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரப்போகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
குரு தரும் யோகம்: குரு பகவான் பார்வையால் தொட்டதெல்லாம் வெற்றியாக முடியும். குருபகவானுக்கு 5,7,9ஆம் பார்வை உள்ளது. குருவின் பார்வை கிடைத்தாலும் அந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்தான். குரு பகவான் மேஷ ராசியில் வக்ரமாக பயணம் செய்தாலும் சில ராசிக்காரர்களுக்கு பார்வையால் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. குரு பகவானுக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்யும் சூரியன் வக்ரமடைகிறார். குரு பகவானுக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் போது வக்ரநிவர்த்தி அடைகிறார். கிரகங்கள் மெதுவாக பின்னோக்கி நகர்தலே வக்ர நிலையாகும்.

மேஷம்: உங்கள் ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் மாதம் முதல் வக்ர நிலையில் பயணம் செய்வார். அஸ்வினி, பரணி நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்வதால் உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நினைத்த காரியம் கைகூடி வரும். புது வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். பதவி உயர்வு தேடி வரும். சம்பள உயர்வும் அலுவலகத்தில் சலுகைகளும் தேடி வரும்.
மிதுனம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் 4 மாத காலம் வக்ரமடைகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவி உயர்வும் கூடவே சம்பள உயர்வும் தேடி வரும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்தாலும் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. செப்டம்பர் மாதம் முதல் குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பார்வை பாக்ய ஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு கிடைக்கிறது. தள்ளிப் போன சுப காரியங்கள் மள மளவென முடியும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும், உங்கள் வீட்டில் பண மழைதான். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். அலுவலகத்தில் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மேலதிகாரி நட்பு பாராட்டுவார். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சிலருக்கு வேறு நல்ல புது வாய்ப்புகளும் தேடி வரும். மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி ஒடுங்கியிருந்த உங்களை ஓங்கி வளர வைப்பதுடன் எங்கும் எதிலும் வெற்றியையும், எதிர்பாராத வளர்ச்சியையும் தரும்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் மனதில் தெளிவு பிறக்கம். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வெற்றிகள் வீடு தேடி வரும். குரு பகவானின் பார்வை பலனும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் திருமண யோகம் கைகூடி வரப்போகிறது.
தனுசு: குரு பகவனை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலைச்சுமையும் குறையும். உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்த மேலதிகாரி வேறு இடத்திற்கு செல்லப்போகிறார். குரு பகவானின் பார்வையால் டிசம்பர் மாதத்திற்குள் உங்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். பணவரவையும், பதவி சுகத்தையும் தரப்போகிறார் குரு பகவான் தரப்போகும் குபேர யோகத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..குருபகவான் வக்ர கதியில் பயணம் செய்யப்போகும் காலத்தில் எதிலும் எச்சரிக்கை தேவை. கர்ப்பிணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தூக்கம் குறையும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க தாமதமானாலும் கிடைத்துவிடும். அலுவலகத்தில் புதிய சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். குரு பகவான் வக்ரகதியில் பயணம் செய்யும் நான்கு மாத காலத்தில் வெற்றிநடை போடப்போகிறீர்கள்.
மீனம்: உங்கள் ராசிநாதன் குரு பகவான் செப்டம்பர் மாதம் முதல் வக்ர கதியில் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகிறார். எதையும் எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வேலை செய்யும் இடங்களில் பளு கூடும் என்றாலும் எளிதில் சமாளித்துவிடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உழைப்புக்கேற்ற மரியாதையும் சலுகைகளும் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். இந்த நான்கு மாத காலத்தில் உங்கள் திறமையை நிரூபிக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். முக்கியப் பொறுப்புகள் வீடு தேடி வரப்போகிறது. குபேர யோகத்தை தரப்போகிறார் குருபகவான் சந்தோஷமாக அனுபவியுங்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications