Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2024: குரோதி ஆண்டில் கல்யாண வரம் தரும் குரு பகவான்.. பலனடையப்போகும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பெயர்ச்சி நிகழும் மங்களகரமாக குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் நாள் மே 1ஆம் தேதி நிகழப்போகிறது. குரு அமரும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெரும். குரு பகவான் ரிஷப ராசியில் அமர்ந்து ஐந்து, ஏழு, ஓன்பதாம் பார்வையாக கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளை பார்க்கிறார். குருவின் சஞ்சாரம், குருவின் பார்வையை பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது யாருக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

எந்த ராசிக்கு எந்த குரு

மேஷம் - குடும்ப குரு
ரிஷபம் - ஜென்ம குரு
மிதுனம் - விரைய குரு
கடகம் - லாப குரு
சிம்மம் - தொழில் குரு
கன்னி - பாக்ய ஸ்தான குரு
துலாம் - அஷ்டம குரு
விருச்சிகம் - களத்திர குரு
தனுசு - ருண ரோக சத்ரு ஸ்தான குரு
மகரம் - பூர்வ புண்ணிய குரு
கும்பம் - சுக ஸ்தான குரு
மீனம் - தைரிய குரு

Guru peyarchi Palan 2024 Guru Peyarchi prediction for 12 Zodiac signs

மேஷம் - குடும்ப குரு: உங்கள் ராசியில் அமர்ந்து ஓராண்டு காலம் பயணம் செய்த குரு பகவான் குரோதி ஆண்டில் தனம், குடும்ப வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். குருவினால் உங்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து அதிர்ஷ்டம் வருகிறது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. ஏழரை சனியால் கஷ்டப்பட்டு, ஜென்ம குருவால் அவதிப்பட்டு வந்த உங்களுடைய பிரச்சினைகள் அத்தனையும் தீரும் காலம் வந்து விட்டது. நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க வியாழக்கிழமை வியாழ ஓரையில் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

ரிஷபம் - ஜென்ம குரு: குருபகவான் ஓராண்டு காலம் உங்கள் ராசியில் அமர்ந்து பயணம் செய்யப்போகிறார். ஜென்ம குரு என்று பயப்பட வேண்டாம். குருவின் பார்வையால் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கைகூடி வரும் பாக்கியங்கள் தேடி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டாலும் குரு பார்வையால் சீக்கிரம் சரியாகி விடும். ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும். குரு அருள் புரியும் ஆலய தரிசனம் அற்புதங்களை ஏற்படுத்தும்.

மிதுனம்- விரைய குரு : குரு பகவான் விரைய ஸ்தானத்தில் அமரப்போகிறார். ஆண்டு முழுவதும் பண வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க பாடு பட்டாலும் முடியாது மருத்துவ செலவுகள் அடிக்கடி வந்து போகும். வம்பு சண்டைக்கு போகாதீர்கள். குரு பகவானின் சுப பார்வையானது உங்கள் ராசிக்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. நோய்கள் தீரும் கடன்கள் அடைபடும் காலம் வந்து விட்டது. வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள். குரு பெயர்ச்சிக்குப் பிறகு குருபகவான் ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் பாதிப்புகள் நீங்கும்.

கடகம் - லாப குரு: லாப ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார். குருவின் பார்வையானது உங்களுடைய தைரிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். திருமணம் நடைபெறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களின் வீட்டில் மழலை சத்தம் கேட்கும் நேரம் வந்து விட்டது.

சிம்மம் - தொழில் குரு: குரோதி ஆண்டு முழுவதும் குரு பகவான் உங்க தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமரப்போகிறார். பத்தில் குரு பதவி யோகத்தை தரப்போகிறார். குருவின் பார்வையால் பணம் தாராளமாக வரும். அதே நேரத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் உற்சாகத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கன்னி - பாக்ய குரு: ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் பாக்யங்களை அள்ளித்தரப்போகிறார். பாக்ய ஸ்தான குருவினால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். குருவின் பார்வையால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குரு பகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுவதோடு மட்டுமல்லாது ராசிக்கு முன்று ஐந்தாம் வீடுகளின் மீது விழுகிறது. தைரியம் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகளும் பூர்வ புண்ணிய சொத்துக்களினால் வருமானமும் கிடைக்கும். நிறைய நன்மைகளும் சந்தோஷமும் அதிகரிக்க குருபகவானை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்கலாம்.

துலாம் - அஷ்டம குரு: குரோதி ஆண்டில் எட்டாம் வீட்டில் அமரும் குரு அஷ்டம குரு உங்களின் கஷ்டங்களை போக்குவார். நினைத்த காரியங்கள் தாமதமானாலும் தடைகளை தாண்டி நடக்கும். வேலை விசயத்தில் கவனம் தேவை. இருக்கிற பதவியை தக்க வைத்துக்கொள்ளுங்கள். குரு பார்வையால் பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உறக்கமின்றி தவித்த உங்களுக்கு சுகமான உறக்கம் வரும். இனிய பயணங்கள் கிடைக்கும். பாதிப்புகள் குறைய குருபகவானை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள்.

விருச்சிகம் - களத்திர குரு: ஏழாம் வீட்டில் அமரப்போகும் களத்திர ஸ்தான குருவின் நேரடி பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். திருமண தடை நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். பணம் பொருள் செல்வம் தேடி வரும். சுகமும் சந்தோஷமும் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். மேலும் நல்லது நடக்க வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை உடுத்துங்கள் குருவிற்கு விரதம் இருங்க. வியாழன் விரதம் வெற்றிகளை தேடித்தரும்.

தனுசு - ருண ரோக சத்ரு ஸ்தான குரு: குரோதி தமிழ் புத்தாண்டு முதல் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமரப்போகிறார் குரு பகவான். நோய் ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் மருத்துவ செலவுகள் வரலாம். கடன்கள் அதிகரிக்கும் சுப விரைய செலவுகள் ஏற்படும். எதிரிகள் பிரச்சினைகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. தொழிலில் கவனமாக இருங்க. ஆறாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டிற்கு வருவதால் விபரீத ராஜயோகம் தரும். கண்நோய்கள் வரும் கவனமாக இருங்க. குரு பார்வையால் பணவரவும் வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும் சந்தோஷங்கள் அதிகரிக்க குருபகவானை சரணடையுங்கள் நல்லது நடக்கும்.

மகரம் - பூர்வ புண்ணிய குரு: குரோதி ஆண்டில் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியத்தில் அமரப்போகும் குருவினால் உங்கள் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். குருவின் பார்வை ஆண்டு முழுவதும் உங்க ராசியின் மீது விழுகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவருமானம் தேடி வரும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ஏழரை சனியால் பிரச்சினை இருந்தாலும் குருவின் பார்வையால் புகழும் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குல தெய்வ கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம் - சுக ஸ்தான குரு: நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குருவினால் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு 12,10, 8 ஆம் வீடுகளின் மீது விழுவதால் சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷமும் சௌபாக்கியமும் பெருகும். வேலையில் தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஜென்ம சனியால் ஏற்பட்டுள்ள சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று வணங்கி வாங்க நல்லது நடக்கும்.

மீனம் - தைரிய குரு: குரோதி ஆண்டில் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் உங்கள் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்பி பணத்தை கொடுக்காதீர்கள். ஏழரை சனி காலமாக இருப்பதால் யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. குருவின் பார்வை உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும். வியாழக்கிழமை குருவிற்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+