Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் கோடீஸ்வர யோகம்.. குரு செய்யப்போகும் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் தேதி பகல் 1மணி அளவில் குரு பகவான் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகர ராசியின் மீது விழுகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம் : குரு பெயர்ச்சியால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வாக்கு பலிதம் ஏற்படும். திடீர் தனவரவு வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுபகாரியம் நிறைவேறும். குருவின் பார்வையால் உத்தியோக உயர்வு, புதிய தொழில் அமையும். வேலை விசயமாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. பொன்னையும் பொருளையும் அள்ளித்தரப்போகிறார் குருபகவான்.

 Guru peyarchi palan 2024: Guru transit to Rishabam prediction for 12 zodiac signs

ரிஷபம் : குருபகவான் ஓர் ஆண்டு காலம் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஜென்மத்தில் அமர்ந்தாலும் நன்மையே செய்வார். வீடு நிலம் வாங்கும் யோகம் கைகூடி வரும். திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளால் நல்ல செய்தி தேடி வரும்.
கூட்டு தொழில் சிறப்படையும். வெளிநாடு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல்நலனில் மட்டும் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிதுனம் : சித்திரை முதல் குரு அமர்கிற இடம் உங்களுக்கு விரைய ஸ்தானம் என்றாலும் நன்மைதான் செய்யும். 12ஆம் வீட்டில் மறைந்த குரு ராஜ யோகத்தை கொடுக்கப்போகிறார். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு வாங்கும் அமைப்பை குரு பகவான் ஏற்படுத்துவார். கடன் தொல்லையில் சிக்கியிருப்பவர்களுக்கு குரோதி ஆண்டு முதல் குபேர யோகம் தேடி வரப்போகிறது. கணவன் மனைவி இடையே வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

கடகம் : குருபகவான் உங்கள் இராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும். யோகங்கள் கைகூடி வரப்போகிறது. வெற்றி மீது வெற்றி வரப்போகிறது. குருவின் பார்வையால் தொட்டதெல்லாம் பொன்னாகும். எதையும் சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். லாப குரு உங்களுடைய தொழில் வியாபாரத்தில் லாபத்தை வாரி வழங்கப்போகிறார்.

சிம்மம் : உங்கள் இராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வந்து அமரும் குரு பெரிய அளவில் நன்மைகளை செய்வார். உங்கள் இராசிக்கு 5 மற்றும் 8ஆம் இடத்திற்கு அதிபதி குரு 10ஆம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் தொட்டது துலங்கும் மண்ணும் பொன்னாகும். மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது. குரோதி ஆண்டு முதல் சுகமும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது.

கன்னி: உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போவதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். பாக்ய ஸ்தான குரு உங்கள் சக்தியை அதிகரிக்கப்போகிறார். பணம் பலவழிகளில் இருந்தும் தேடி வரும். புகழும் கீர்த்தியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு முன் கடனாக கொடுத்த பணம் உங்கள் வீடு தேடி வரும். மே மாதம் முதல் உங்கள் வாழ்க்கை உச்சத்திற்கு செல்லப்போகிறது.

துலாம்: குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்தாலும் ராஜயோகம்தான். உங்களுக்கு கெட்டவன் குரு எட்டாம் வீட்டில் மறைந்தாலும் நன்மையே செய்வார். கெட்டவன் கெட்டிடில் கிட்டவன் ராஜயோகம் என்று சொல்வது போல குரு பகவான் நன்மைகளை அள்ளித்தரப்போகிறார். வெளிநாடு வேலை வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் இருந்தும் தேடி வரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களைத் தேடி வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்: குரு பகவான் உங்களுக்கு மே மாதம் முதல் சிறப்பான வாழ்க்கையை தேடி தரப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பு. குரு பலன் வந்து விட்டது திருமண சுப காரியம் கைகூடி வரும். தள்ளிப்போன திருமண அற்புதமாக நடைபெறும். தொழில் வியாபாரம் சிறப்பான லாபத்தை கொடுக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி யோகம் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும். குரோதி ஆண்டு முதல் சிறப்பான யோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.

தனுசு : குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் மறைந்தாலும் ராஜயோகம்தான். நோய்கள் நீங்கும். குரு பகவான் பார்வையானது தன ஸ்தானம், தொழில் ஸ்தானம், விரைய ஸ்தானத்தின் மீது விழுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். படித்து முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செய்யும் தொழிலில் முதலீடுகளுக்கு லாபம் அதிகரிக்கும். முன்னேற்றம் அதிகரிக்கும்.

மகரம் : குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீடு வாங்கப்போகிறீர்கள். பல வழிகளில் இருந்து எதிர்பாராத தனவரவு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். திருமணம் கைகூடி வரும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரோதி ஆண்டு முதல் குரு பகவான் வருமானத்தை வாரி வழங்கப்போகிறார்.

கும்பம்: குரு பகவான் மே மாதத்தில் இருந்து உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். வேலையில் இடம் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். மன குழப்பத்தில் இருந்த உங்களுக்கு குரோதி ஆண்டு தெளிவான சிந்தனையை தரப்போகிறது. நலத்தையும் வளத்தையும் வாரி வழங்கப்போகிறார் குரு பகவான்.

மீனம்: உங்கள் ராசி அதிபதி குரு பகவான், உங்கள் இராசிக்கு மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குருபார்வை கோடி நன்மைகளை தரப்போகிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு குருவின் அருளால் இடம் வாங்கி வீடு கட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. மேன்மைகள் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+