குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் குரு பெயர்ச்சி.. கோடீஸ்வர யோகம் யாருக்கு கிடைக்கும்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் ஓராண்டு காலம் பயணம் செய்யப்போகிறார். நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் தேதி பகல் 1மணி அளவில் குரு பகவான் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகர ராசியின் மீது விழுகிறது. குரு பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
தனுசு : உங்கள் ராசி அதிபதி குரு பகவான் 6ஆம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். உங்கள் இராசிக்கு குரு பகவான், ஜென்மாதிபதி மற்றும் சுகாதிபதி அதாவது உங்களுக்கு கேந்திராதிபதி. கேந்திராதிபதி கெட்டுப்போனால் யோகம்தான். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம் என்று சொல்வது போல குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் மறைந்தாலும் ராஜயோகம்தான்.

நோய்கள் நீங்கும். பாடாய் படுத்திய கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. குரு பகவான் பார்வையானது தன ஸ்தானம், தொழில் ஸ்தானம், விரைய ஸ்தானத்தின் மீது விழுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். படித்து முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செய்யும் தொழிலில் முதலீடுகளுக்கு லாபம் அதிகரிக்கும். முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் இராசிக்கு 6ஆம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் லாபத்தை அள்ளித்தரப்போகிறார்.
மகரம் : குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். உங்கள் ராசிக்கு 3 மற்றும் 12ஆம் வீட்டிற்கு உரிய குரு பகவான் 5ஆம் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். குரு பகவானின் பார்வையானது உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானத்தையும்,லாபஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீடு வாங்கப்போகிறீர்கள். பல வழிகளில் இருந்து எதிர்பாராத தனவரவு கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து வீடு தேடி உதவிகள் வரும்.
வெளிநாடு செல்லும் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வளர்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு வெற்றிகரமான குரு பெயர்ச்சியாக உள்ளது. குரு அருளும் திரு அருளும் உள்ளது. திருமணம் கைகூடி வரும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு மகர ராசிக்காரர்களுக்கு வருமானத்தை வாரி வழங்கப்போகிறார்.
கும்பம் : குரு பகவான் மே மாதத்தில் இருந்து உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குரு உங்களுக்கு தன ஸ்தானம் லாப ஸ்தான அதிபதி. யோக காரகன் குரு பகவான், 4ஆம் வீட்டில் அமர்ந்து 8,10,12ஆம் இடங்களை பார்வையிடப்போகிறார். வேலையில் இடம் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. வியாபாரத்தில் விறுவிறுப்பாக முன்னேறும் உண்டாகும்.
எதிரிகள் தொல்லைகள் நீங்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். திருமணம் சுபகாரியம் நடைபெறும். ஆன்மீக பயணம் செல்லும் யோகம் உண்டாகும். வங்கிக்கடன் கிடைக்கும். மன குழப்பத்தில் இருந்த உங்களுக்கு குரோதி ஆண்டு தெளிவான சிந்தனையை தரப்போகிறது. மொத்தத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் நலத்தையும் வளத்தையும் தரப்போகிறார்.
மீனம் : உங்கள் ராசி அதிபதி குரு பகவான், உங்கள் இராசிக்கு மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குரு பகவானின் பார்வை உங்கள் இராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குருபார்வை கோடி நன்மைகளை தரப்போகிறது. நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் சுற்றம் சூழ சிறப்பாக நடைபெறும்.
தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு குருவின் அருளால் இடம் வாங்கி வீடு கட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. மன குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் வளர்ச்சியைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படப்போகின்றனர். மேன்மைகள் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications