குரு பெயர்ச்சி பலன்: 12 ஆண்டுகளுக்குப் பின் ரிஷபத்திற்கு மாறும் குரு.. திடீர் ஜாக்பாட் யாருக்கு?
சென்னை: குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மே 1ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பெயர்ச்சியால் நல்ல வேலையும் சம்பள உயர்வும் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். திடீர் ஜாக்பாட் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கொரோனா காலத்திற்குப் பிறகு பலருக்கும் பலவித நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதார நிலையானது நிச்சயமற்ற நிலையாக உள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் மீண்டாலும் பொருளாதார நெருக்கடி நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. சிலருக்கு திடீர் என வேலை போகிறது. சிலருக்கு வேலை நிச்சயமற்றதாக இருக்கிறது. மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் நல்ல வேலை கிடைக்கும், புரமோசன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. வேலையில் புரமோசனும் சம்பள உயர்வு கிடைக்கும். பேசும் வார்த்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கும் குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
ரிஷபம்: ஜென்ம குரு வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் குரு பகவான். அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும். குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும். மே மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. சுபகாரிய தடைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
சிம்மம்: பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்.
கன்னி: ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் நல்ல வேலையை கொடுப்பார். குருவின் பார்வையால் வேலையில் இருந்த தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
விருச்சிகம்: குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணம் பல வழிகளில் வரும் தொழில் வியாபாரத்தில் பல மடங்கு லாபம் கிடைக்கும்.
தனுசு: வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வும் கிடைக்கும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். குரு பெயர்ச்சி மன மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும்.
மகரம்: குரு பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மே மாதத்திற்குப் பிறகு வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
கும்பம்: மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் நான்காம் வீட்டிற்கு மாறப்போகிறார். சுக ஸ்தான குருவின் பார்வை உங்க ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெற்றியும் அனுகூலமும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications