சிம்மாசனத்தில் அமரும் காலம் வந்துவிட்டது.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்கவே முடியாது.. குரு பெயர்ச்சி பலன்!
சென்னை: 2024 மே 1ம் தேதி நடக்க போகும் குரு பெயர்ச்சி மூலம் கடக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்க போகிறது என்று பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி. மேஷ ராசியில் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் பல ராசிதாரர்களின் வாழ்க்கை அப்படியே மாற போகிறது.

இந்த குரு பெயர்ச்சி மூலம் கடக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்க போகிறது என்று பார்க்கலாம்
வாழ்க்கை மாறும்; சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் கடக ராசிக்காரராகில், அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல விதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும்.
இத்தனை காலம் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கிற வேலையில் போதிய வருமானம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இனி அப்படி புலம்ப வேண்டாம். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் வாழ்க்கை மாற போகிறது.
சிம்மாசனத்தில் அமரும் காலம் : முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல வேலைகள் உங்கள் வீட்டை தேடி வரும்.
அரசு வேலை கூட தேடி வரும். வேலை ரீதியாக உங்களுக்கு வெற்றி மீது வெற்றி குவிந்து கொண்டே இருக்கும். நீங்கள் ஏற்கனவே பார்க்கும் வேலையில் மே மாத்திற்கு பின் திடீர் ப்ரோமோஷன் கிடைக்கும். அதாங்க திடீர் என்று டிஎல் ஆவது, மேனேஜர் ஆவது என்று உங்கள் வேலையில் நீங்கள் சிம்மாசனத்தில் அமர போகும் காலம் வந்துவிட்டது.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்: அதேபோல் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும்.
லாபமாக கொட்டும்: உங்களுக்கு கஷ்டமாக இருந்த பொருளாதாரம் இனி சரியாகும். பணம் உங்களை தேடி வரும். பிஸினஸில் செய்யும் முதலீடுகள் லாபமாக மாறும் காலம் வந்துவிட்டது.
மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்: உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம்.
கடன் வேண்டாம் - கெட்ட எண்ணம் வேண்டாம்: அதீத பணம் வருகிறது என்று நம்பி கடன் வாங்க வேண்டாம். கடன் பிரச்சனைகளில் மாட்டி சிக்க வேண்டாம். மற்றவர்களை காலி செய்யும் கெட்ட எண்ணம் வேண்டாம். யாரையும் பற்றி தவறாக யாரிடமும் பேச வேண்டும். கொஞ்சம் வாயை குறைத்துக்கொள்ளுங்கள் கடக ராசிக்காரர்களே!
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications