குரு பெயர்ச்சி பலன்: கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு.. யார் வாழ்க்கை சட்டென மாறும்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஏப்ரல் 17 முதல் மே 1ஆம் தேதி வரைக்கும் மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதத்தில் பயணம் செய்யப்போகிறார். கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம். குரு ராசிக்குள் பயணம் செய்வதால் புது முயற்சிகள் கைகூடும். தொட்டது துலங்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும். சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி. கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உடல் அசதி, சோர்வு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை.

ரிஷபம்: குரு பகவான் துலாம் ரிஷபம் ஆகிய ராசிக்கு குரு நன்மையை செய்யமாட்டார் அப்படி நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். மே 1ஆம் தேதி வரைக்கும் குரு பகவான் மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். நோய்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும்.
மிதுனம்: குரு பகவான் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் 11ம் பாவத்தில் மே மாதம் 1ஆம் தேதி வரை பயணம் செய்வார். ஏப்ரல் 17ஆம் தேதி முதல் சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குருவின் பார்வை 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்வையிடுகிறார். ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும் புதிய பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம்
கடகம்: குரு பகவான் பத்தாம் பாவமான தொழில், கர்மா ஸ்தானம் என்ற இடத்தில் பயணம் செய்கிறார். கோசாரத்தில் பத்தில் குரு பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார். குடும்ப ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் நிதி நிலைமை மேம்படும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இது வரை கொடுத்த வாக்குறுதிகளை இனி நிறைவேற்றி விடலாம். பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள். வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புதிய முயற்சிகள் கை கூடி வரும். செய்யும் தொழில் வளர்ச்சி அடையும்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் , பாக்ய ஸ்தானம், தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு குரு பகவான் வருகிறார். ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். மே மாதம் வரைக்கும் பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும். தனது ஜந்தாம் பார்வையாக உங்கள் ராசியை குரு பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். நீண்ட காலமா வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும். மே மாதம் வரைக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.
கன்னி: உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு பயணம் செய்கிறார். மே மாதம் வரைக்கும் மேஷ ராசியில் இருக்கும் குரு 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். பணம் சேமிப்புகள் கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். புது முயற்சிகள் கை கூடும். தொழில் லாபம் கூடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications